மேலும் அறிய

திமுகவினரை கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

”திமுகவினர் யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர்”

அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை கொண்டாடுவது தொடர்பாக, கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி,  ”எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக வர இருக்கிறார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளது.

அதிமுகவினர் கட்சி கொடி கம்பம் நட காவல்துறையினர் தடுக்கின்றனர். அதிகாரிகள், காவல் துறையினர் திமுக கட்சிக்காரர்கள் போல நடந்து கொள்கிறார்கள். திமுக மீது மக்களிடம் எதிர்ப்பு அதிகமாக உள்ளது. திமுக மிரட்டலுக்கு பயப்படாமல் அதிமுக ஐ.டி. விங்க் சிறப்பாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே துணிச்சலாக திமுகவைவும், ஸ்டாலினையும் எதிர்க்கிறார். திமுக எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ். நீட் தேர்வை சொல்லி திமுக ஏமாற்றிக் கொண்டுள்ளது.


திமுகவினரை கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவையில் சாலைகள் எங்கும் மோசமாக உள்ளது. சாலைகளை போட்டு தருமாறு திமுகவினரிடம் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். சில மீடியாக்கள் திமுக ஆட்சியை தூக்கிப் பிடிப்பதை கைவிட்டால், ஆட்சி போய்விடும். தமிழக மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத முதலமைச்சர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் இலஞ்சம். குடும்ப ஆட்சி, மோசமான ஆட்சி நடக்கிறது. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த மோசமான ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது. இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது.


திமுகவினரை கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

இந்த ஆட்சி மாற வேண்டும். மக்கள் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி முடிவு செய்து விட்டனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் எப்போதும் இரு மொழி கொள்கை தான். மும்மொழி கொள்கை இல்லை. இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது.  திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும். நாளை கோவை வரும் மத்திய விவசாய துறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். திமுகவின் 39 எம்.பி.க்கள் எதுவுமே செய்யவில்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுகவினர் முடக்கினர். திமுகவினர் யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget