மேலும் அறிய

வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

வன்னிய அரசின் கருத்து விஜயின் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வன்னியரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது பலரது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும்

அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்து அரசின் கருத்தாக பார்க்கப்படும் என்பதால், வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாணவர் விடுதிகளில் உணவு தரம் குறித்த புகார்கள் இருக்கும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது தொடர்பான முடிவு குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தை கண்டித்து, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

மேலும், அமைச்சர் வன்னியரசுவின் இல்லம் முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும் என்றும், அவர் தனது கருத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அமைச்சர் வன்னிய அரசின் கருத்து விஜயின் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வன்னியரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்தார். அரசு விடுதிகளில் ஏற்கனவே உணவு முறையாக வேகவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாட்டுக்கறி போன்று எளிதில் வேகாத இறைச்சியை எவ்வாறு கொடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார். மாட்டுக்கறி கொடுப்பது என்பது மதம் மாற்றும் செயல் என்பதுதான் இதன் உள் அர்த்தம் எனவும் சுட்டிக்காட்டினார். 

இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை

நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்ததன் காரணமாக நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், இதுபோன்ற அரசியல் கட்சி மாறுதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய தமிழகம் உள்ளிட்ட சுமார் 15 அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படும் அனைத்து கட்சி கூட்டமைப்பு, இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கும் என க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget