மேலும் அறிய

’அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் சில அலங்கார பணிகளுக்கு செலவு செய்யப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை கோவைக்கு வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது,  அலுவல் மொழி மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, 11ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதியதாக 50,000 விவசாய மின் இணைப்புகளை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். ஒன்னறை ஆண்டுகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசணை செய்யப்பட்டது. இதேபோல வருகின்ற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசணை செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.


’அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கோவையில் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலைகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போட வேண்டிய சாலைகள். கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள். இந்த சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் சில அலங்கார பணிகளுக்கு செலவு செய்யப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தற்போது 26 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் துவங்கும். இதேபோல நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கும்.
கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 சதவீதம் நிறைவறைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும். பொத்தம் பொதுவாக அரசியல் கருத்து சொல்ல வேண்டும். இங்கு செய்யப்பட்டு பணிகளைப் பார்த்து அவர் கருத்து சொல்ல வேண்டும். கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  அவிநாசி சாலை பாலப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் திமுக அலுவலகம் கட்ட அவிநாசி சாலையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அதன் டிசைன் ரெடியாகி வருகிறது. விரைவில் பூர்வங்க பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
Embed widget