மேலும் அறிய

Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில், 5.12 கிலோ மீட்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் நூறடிச் சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் கொள்ளையடிக்க திட்டமிடவும், தப்பிக்கவும் உதவிய விஜய்யின் மனைவி நர்மதா, நகைகளை மறைத்து வைத்த நர்மதாவின் தாய் யோகராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜயை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நவம்பர் 27 ம் தேதி இரவு நூறடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ நகைகள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தருமபுரியை சேர்ந்த விஜய் (26) இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

இந்த வழக்கில் விஜய்யின் மாமியார் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த விஜயை பிடிக்க கஷ்டமாக இருந்தது. தருமபுரி வனப்பகுதியில் விஜய் ஓடிக் கொண்டிருந்தால் பிடிக்க முடியவில்லை. 3 நாட்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியே வந்த அவர், சென்னை, திருப்பதி என மாறி மாறி சென்று கொண்டிருந்தார். கலஹாஸ்தி சென்ற விஜய், சபரி மலைக்கு மாலை அணிந்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் சிம் வாங்குவதற்காக ஒரு மொபைல் கடைக்கு வந்த போது விஜயை கைது செய்தோம். அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. விஜய் தருமபுரியில் அவரது உறவினர் வீட்டில் திருடிய 42 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில், 5.12 கிலோ மீட்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்க வேண்டுமென்ற நோக்கம் விஜய்க்கு இருக்கவில்லை. ஒரு மொபைல் கடையில் திருட முயற்சி செய்துள்ளார். அங்கு கடைக்கு சரக்கு வந்ததை இறக்க ஆட்கள் இருந்ததால், அதைவிட்டு விட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ஒரு சிறிய சந்தில் சென்ற போது ஒரு பிளைவுட் இருந்துள்ளது. அதனை தொட்டதும் சிறிய வழி இருப்பது தெரிந்ததும், உள்ளே செல்ல முயன்றுள்ளார். கொஞ்சம் மேலே ஏறியதும், வெளிச்சம் இருந்த பக்கமாக சென்று கடைக்குள் நுழைந்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு இருப்பதை போன்ற உடல்வலு அவருக்கு இயல்பாகவே இருந்துள்ளது. அவர் எடை குறைவாக இருந்ததால் அந்த வழியாக செல்ல முடிந்துள்ளது. கடைக்குள் நுழைந்ததும் முதலில் பணம் எடுக்க தான் முயற்சி செய்துள்ளார். பணத்தை தேடி கிடைக்காததால் ஆங்காங்கே இருந்த நகைகளை எடுத்துள்ளார். அக்கடையில் சில இடங்களில் மட்டுமே அலாரம் அடிக்கும் வகையில் இருந்துள்ளது. இவர் சென்ற வழியில் அலாரம் இருக்கவில்லை.

இப்போது வரை விசாரணை செய்ததில் கொள்ளைக்கு வெளி ஆட்கள் யாரும் உதவி இல்லை என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காலை நேரங்களில் ஒரு ஊரில் இருப்பது,  இரவு பேருந்தில் ஏறி பயணம் செய்வது என சுற்றி கொண்டே இருந்தார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நகைக்கடையில் இரவு காவலில் 50 வயதிற்கு உட்பட்டவர்களை நியமிக்கவும், வைப்ரேசன் சென்சார் பொருத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் நகைகளை லாக்கரில் வைக்கவும், புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நகைக்கடைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pa Ranjith on Armstrong Murder  : ஆம்ஸ்ட்ராங் படுகொலை..தேதி குறித்த பா.ரஞ்சித்..திடீர் அழைப்பு!MR Vijayabashkar Arrest : கண் அசைத்த செந்தில் பாலாஜி!விஜயபாஸ்கர் அதிரடி கைது!சிக்கலில் கரூர் அதிமுக?EPS on Electricity Tariff : ”இப்ப ஷாக் அடிக்கலயா ஸ்டாலின்?”வெளுத்து வாங்கிய EPS மின் கட்டண உயர்வு!Electricity Tariff Hike | ”ஷாக் அடிக்கும் மின்கட்டணம் மறந்துடீங்களா ஸ்டாலின்?”விளாசும் நெட்டிஷன்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
பாலக்கோடு அருகே  2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
பாலக்கோடு அருகே 2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
Raayan Trailer:  சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்
Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
Embed widget