மேலும் அறிய

கோவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்க எளிய வழிமுறைகள்!

கோவையில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்- 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி சிறப்பு தீவிர திருத்தம் முடிக்கபட்டு 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வரைவு வாக்களர் பட்டியலை அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதோர் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மற்றும் ஆகிய கோரிக்கைகளுக்காக வைக்கப்பட்டு 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் வெளியிட்டார். அதன் விபரம் பின் வருமாறு,


கோவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்க எளிய வழிமுறைகள்!

  • கோவை – 10 சட்டமன்ற தொகுதிகள்மொத்தம்- 26,96,813,ஆண்கள்- 13,00,889, பெண்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்- 528
  • சேர்க்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026) மொத்தம்- 1,64,518,ஆண்கள்- 77,766,பெண்கள்-86,723,மூன்றாம் பாலினத்தவர்-29
  • நீக்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026),மொத்தம்- 42,313,ஆண்கள்- 20,159,பெண்கள்- 22,134,மூன்றாம் பாலினத்தவர்-20
  • தொண்டாமுத்தூர்- மொத்தம்- 2,87,442,ஆண்கள்- 1,38,968,பெண்கள்- 1,48,371,மூன்றாம் பாலினத்தவர்- 103
  • கோவை தெற்கு - மொத்தம்- 1,86,509,ஆண்கள்- 90,214,பெண்கள்- 96,263,மூன்றாம் பாலினத்தவர்- 32
  • கோவை வடக்கு - மொத்தம்-2,91,533,ஆண்கள்- 1,43,383,பெண்கள்- 1,48,122,மூன்றாம் பாலினத்தவர்-28
  • சிங்காநல்லூர் - மொத்தம்- 2,66,058,ஆண்கள்- 1,28,758,பெண்கள்- 1,37,277,மூன்றாம் பாலினத்தவர்- 23
  • கவுண்டம்பாளையம் - மொத்தம்- 4,07,507,ஆண்கள்- 1,98,430,பெண்கள்- 2,08,963,மூன்றாம் பாலினத்தவர்- 114
  • சூலூர் - மொத்தம்- 3,03,541,ஆண்கள்- 1,45,987,பெண்கள்- 1,57,452,மூன்றாம் பாலினத்தவர்- 102
  • கிணத்துக்கடவு - மொத்தம்- 3,00,486,ஆண்கள்- 1,44,562,பெண்கள்- 1,55,888,மூன்றாம் பாலினத்தவர்- 36
  • பொள்ளாச்சி - மொத்தம்- 2,02,015,ஆண்கள்- 96,061,பெண்கள்- 1,05,919,மூன்றாம் பாலினத்தவர்- 35
  • வால்பாறை - மொத்தம்- 1,72,284,ஆண்கள்- 81,504,பெண்கள்- 90,759,மூன்றாம் பாலினத்தவர்- 21
  • மேட்டுப்பாளையம் - மொத்தம்- 2,79,438,ஆண்கள்- 1,33,022,பெண்கள்- 1,46,382, மூன்றாம் பாலினத்தவர்- 34

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை மொபைல் ஆப் மூலம் எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்பதை கீழே காணலாம்.

என்னென்ன தேவை: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number), அல்லது உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் தொகுதி விவரங்கள்.

பெயரைச் சரிபார்க்கும் வழிமுறைகள்: வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களைத் தேட இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. இணையதளம் மூலமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும். அதில் 'Search in Electoral Roll' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


கோவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்க எளிய வழிமுறைகள்!

 மூன்று முறைகளில் தேடலாம்:

  • Search by Details: உங்கள் பெயர், தந்தை பெயர், வயது, மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் டைப் செய்து தேடலாம்.
  • Search by EPIC: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No) உள்ளிட்டு நேரடியாகத் தேடலாம். (இதுவே எளிதான வழி).
  • Search by Mobile: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் தேடலாம்.
  • விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டை உள்ளிட்டு 'Search' கொடுக்கவும்.

உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், அதன் விவரங்கள் திரையில் தோன்றும். 'View Details' என்பதைக் கிளிக் செய்து உங்கள் வாக்குச்சாவடி எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 'Voter Helpline' செயலி (App) மூலமாக: உங்கள் ஸ்மார்ட்போனில் Voter Helpline செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.செயலியைத் திறந்து 'Search Your Name in Electoral Roll' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.EPIC எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை அளித்து உங்கள் பெயரைக் கண்டறியலாம்.

முக்கிய குறிப்புகள்: பெயர் இல்லையென்றால்: ஒருவேளை உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றால், படிவம் 6 (Form 6) மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்கள்: பெயரில் பிழை அல்லது முகவரி மாற்றம் இருந்தால், ஆன்லைன் மூலமாகவே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

நினைவில் வைக்கவேண்டியவை: வாக்காளர் அடையாள அட்டை கையில் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும். எனவே முன்கூட்டியே சரிபார்த்துவிடுவது நல்லது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget