மேலும் அறிய

Watch Video: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் ; அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ..!

பயங்கர சத்தத்துடன் குழாய் வெடித்து சிதறியது. இதனால் அடியிலிருந்த மண், குழாய், எரிவாயு உள்ளிட்டவை ஒட்டுமொத்தமாக தூக்கி வாரிப் போட்டுள்ளன. இதைக் கண்ட மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

கோவையில் எரிவாயு குழாய் சோதனையின் போது திடீரென எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய்கள் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகளை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் 230 கி.மீ. தூரத்துக்கு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Watch Video: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் ; அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ..!

இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோவை மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் சாலையோரமாக எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. அப்போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது. சோதனைக்காக எரிவாயு அனுப்பபட்ட போது, எதிர்பாராத விதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து எரிவாயு கசிந்து வெளியேறியது.

Watch Video: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் ; அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ..!

ஒருகட்டத்தில் குழி தோண்டப்பட்ட இடத்தில் பயங்கர சத்தத்துடன் குழாய் வெடித்து சிதறியது. இதனால் அடியிலிருந்த மண், குழாய், எரிவாயு உள்ளிட்டவை ஒட்டுமொத்தமாக தூக்கி வாரிப் போட்டுள்ளன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.

கோவையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் - நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்ப்பு@abpnadu pic.twitter.com/w90lFrDguQ

— Prasanth V (@PrasanthV_93) August 11, 2022

">

இந்த நிலையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் எரிவாய் குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர்கள், நின்ற படியே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது. அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடித் தப்பிய காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதேசமயம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Watch Video: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய் ; அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ..!

எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டதால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எரிவாயு குழாய் வெடிப்பிற்கான காரணம் குறித்து காவல் துறையினரும், அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget