மேலும் அறிய

கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - கோடநாடு வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் பரபரப்பு

’’கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது’’

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகம் பி.ஆர்.எஸ் வளாகம் என அழைக்கப்படுகிறது. இங்கு, காவலர் பயிற்சி பள்ளி, கவாத்து மைதானம், குதிரையேற்ற பயிற்சி மைதானம், காவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. முக்கியமான சில வழக்குகளில் குற்றவாளிகளை காவலில் எடுத்து காவல் துறையினர், பாதுகாப்பிற்காக இங்குள்ள அலுவலகங்களில் வைத்து விசாரணை நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தனபாலின் ஓட்டுனர் காவகுமார் ஆகியோரிடம் இவ்வளாகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றிருந்தது. நேற்றைய தினம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க : கோடநாடு கொலை வழக்கு - எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இரண்டாவது முறையாக விசாரணை

இந்த வளாகத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் காவலர் விமல்ராஜ் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து விமல்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மோப்ப நாய் பிரிவு காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்களும் மைதான வளாகத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், போன் செய்து மிராட்டல் விடுத்தவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மோகனகாந்தி என்பது தெரியவந்தது. விமல்ராஜின் உறவினரான மோகனகாந்தி, அவர் மீதான குடும்ப முன் விரோதம் காரணமாக மது போதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget