மேலும் அறிய

ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்துப்பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது.. பாஜகவினர் சாலை மறியல்..

பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக .ராசா பதவி வகித்து வருகிறார். இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் .ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் .ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரியும் பா..., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி தொகுதியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்றிரவு பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். வீடியோ ஆதாரத்துடன் அந்த புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கடந்த 18 ம் தேதியன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர், .ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்துப்பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது.. பாஜகவினர் சாலை மறியல்..

இதனிடையே இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசிய காட்சிகள் வெளியாகின. அதில் ஆ.ராசா மற்றும் திமுகவினர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து பேசியிருந்தார். “இந்த தேதியில் வருகிறேன் எனக்கூறி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கால் எடுத்து வை பார்க்கலாம்.. அத்தனை திமுகவினரும் சேர்ந்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வா பார்க்கலாம் கோவை மாவட்டத்திற்குள். நீ எங்கே கால் எடுத்து வைக்கிறேன் என பார்க்கிறேன். இது பகிரங்க சவால். தயாரா திமுகவினர்? .ராசாவை எங்கே கூப்பிட்டு வருகிறீர்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம்.

சனாதன தர்மத்தை ஒழிப்பதாக எவனாவது வந்தால் செருப்பால் அடிப்பேன். யார் நீங்க எல்லாம்? என்ன தெரியும் இந்து சனாதன தர்மத்தை பற்றி? இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலையில் அவரை வீட்டில் இருந்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த பாஜக தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget