மேலும் அறிய

’நான் அரசியலுக்கு வருவதற்கு காலம் இருக்கிறது’ - நடிகர் பிரசாந்த் பேட்டி

"அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியீடு உள்ளது எனவும், அந்தகனில் எல்லா விதமான பிரசாந்தையும் பார்க்கலாம்"

கோவையில் ஐ.எச்.எஸ் அமைப்பு சார்பில் வரும் நவம்பர் மாதம் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குதிரையேற்ற போட்டி மற்றும் போலோ போட்டிகள் ஆகிய இரு போட்டிகளும் நவம்பர் 20 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக பிற விளையாட்டுகளை போல போலோ பிரிமியர் லீக் போட்டிகளும் நடத்தப்பட இருக்கிறது.

குதிரை விளையாட்டு

முன்னதாக நடிகர் பிரசாந்தின் திரைப்படப் பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரக்கூடிய நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இது ஹிஸ்டரி மேக்கிங் என்றும், குதிரை விளையாட்டு மூலம் அதற்கான ஒரு கட்டமைப்பை செய்து வருகிறோம் எனவும் கூறிய அவர், கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போன்று இனி இந்த போட்டிகளுக்கு பி.பி.எல் இருக்கும் எனவும் தெரிவித்தார். சின்ன வயதில் இருந்து குதிரை விளையாட்டு எனக்கு பிடிக்கும், என்னுடைய படங்களிலும் குதிரைகளை கொண்டு வந்து விடுவேன் எனவும், குதிரை எனக்கு பிடித்த விலங்கு எனவும் தெரிவித்தார். படப்பிடிப்பு போது குதிரையில் பயணித்த நிகழ்வுகளை பகிர்ந்த அவர், தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அதை ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அந்தகன் திரைப்படம்

அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியீடு உள்ளது எனவும், அந்தகனில் எல்லா விதமான பிரசாந்தையும் பார்க்கலாம் என தெரிவித்த அவர், அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். GOAT படம் பண்ண காரணமாக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன் எனவும், தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நல்லது எனவும் தெரிவித்தார். நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்ய தயார் என  கூறிய அவர், அப்பா திறமையான இயக்குநர், டெக்னாலஜி கற்றுக் கொண்டு அவற்றை படத்தில் பயன்படுத்தியுள்ளார் எனவும், 2026 அரசியல் பயணம் பற்றி அப்பறம் பேசலாம் என தெரிவித்தார். ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கணும் என்பது இல்லை, அது அவர்களின் கருத்து எனவும்,கருத்து யார் வேண்டுமானல் சொல்லலாம் எனவும், மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் எனவும் நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
coimbatore power cut: கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget