பிரமாண்டமாக நடந்த ’World Cities Day Connect 2023' நிகழ்ச்சி.. சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பங்கேற்ற அதிகாரிகள்..
சென்னை மீனம்பாக்கம் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில், அனைவருக்கும் நிலையான, அனைத்தும் உள்ளடக்கிய நிலையான நகரங்களைக் கட்டமைக்க எஸ்.டி.சியால் 'World Cities Day Connect 2023' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சஸ்டெய்னபிள் டெவலப்மெண்ட் கவுன்சிலின்(எஸ் டி.சி) 'World Cities Day Connect' நிகழ்ச்சியில், எஸ்.டி.சியின் தலைவரும் முன்னாள் கூடுதல் செயலாளருமான ஜி. ஏ. ராஜ்குமார் ஐ.ஏ.எஸ், புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன்,சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மீனம்பாக்கம் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில், அனைவருக்கும் நிலையான, அனைத்தும் உள்ளடக்கிய நிலையான நகரங்களைக் கட்டமைக்க எஸ்.டி.சியால் 'World Cities Day Connect 2023' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஐநா வின் மனிதக் குடியிருப்பு செயற்றிடம் (UN-Habitat) உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் சீர்மிகு நகரங்களின் வளர்ச்சியை வலுவாக முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினர்கள் " யூத் லீட்ஸ் சஸ்டைனபிலிட்டி" என்ற தலைப்பில் இணைய ஊடகத்தையும் இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர்.
இது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், இளைஞர்களுக்கான பங்களிப்பை ஊக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்ட தளமாகும். உறுதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குவது பற்றிய விவாதங்கள், தனிநபர் ஆராய்ச்சி, அனுபவங்கள் மற்றும் நகர்ப்புறம் பற்றிய தொலைநோக்கு பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
எஸ்.டி.சி யின் அகில இந்திய தலைவரும் முன்னாள் கூடுதல் செயலாளருமான ஜி ஏ ராஜ்குமார் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரெசிடன்ட் தட்சணாமூர்த்தி ராமு, பொதுச்செயலாளர் கோகுல்நாத், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் கே.லட்சுமிநாராயணன், வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஆர்எஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சி. எம்.டி. ஏ உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ், கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப், மியான்மர் கன்சல் ஜெனரல் ரங்கநாதன், ஸ்பெயின் கன்சல் ஜெனரல் ஆண்டனி லோப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
உலக நகரங்கள் தினத்தை உலகளவில் கடைபிடிக்கும் வகையில், இந்த நிகழ்வு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.