Tourism: சுற்றுலா நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை மற்றும் இறுதி வாய்ப்பு
" தங்கள் நிறுவனம் செயல்பட அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனை இறுதி வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மேற்காணும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்"
சுற்றுலா துறையிலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை எச்சரித்துள்ளது.
சுற்றுலா முகவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் :
பதிவு செய்யப்படாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழகத்திற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தமிழக சுற்றுலாத்துறை சார்பாக உண்டு உறைவிடம் முகாம் நடத்துபவர்கள் (Bed & Breakfast/ Homestay), சாகச சுற்றுலா நடத்துபவர்கள்(Adventure Tourism Operators), முகாம் நடத்துபவர்கள் (Camping Operators), கேரவன் பார்க் / சுற்றுலா நடத்துபவர் (Caravan Tour Operators) போன்ற சுற்றுலா முகவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இறுதி வாய்ப்பு
தற்சமயம் மேற்கண்ட முகவர்கள் பிரிவில் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி 31.03.2023, க்குள் சுற்றுலா இணையதளத்தில் www.tntourismtors.com. என்ற இணைய முகவரியில் பதிவு செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாக தெரிய வருகிறது. எனவே இறுதி வாய்ப்பாக இம்மாத இறுதிக்குள் (31.07.2023) மேற்கண்ட முகவர்கள் www.tntourismtors.com. என்ற இணைய முகவரியில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இதனை தவறும் பட்சத்தில் தங்களது நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தங்கள் நிறுவனம் செயல்பட அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனை இறுதி வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மேற்காணும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம்
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;
சுற்றுலா அலுவலர்,
சுற்றுலா அலுவலகம்,
கோவளம் சாலை,
மாமல்லபுரம்.
தொலைபேசி எண்.044 – 2744 2232
கைபேசி எண்; 91769 95869.
மின்னஞ்சல் முகவரி: touristofficermpm@gmail.com
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்