மேலும் அறிய

பாம்பு கடிக்கான மருந்துகளை தயாரிக்கும் பணிகள் கிண்டி கிங் ஆய்வகத்தில் மீண்டும் தொடக்கம்...!

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான ஆய்வு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. .

சென்னையில் கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1899 ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நோய்கள் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டது. சின்னம்மை, காலரா, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பெருந் தொற்றுகள் தொடர்பான ஆய்வுகளில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பின் போது இந்த ஆய்வகத்தில் 50 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பிசிஜி தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்களாக பிசிஜி ஆய்வகம் தாயாரிக்கும் பணியில் இந்த ஆய்வகம் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கிது முதல் தமிழ்நாட்டில் முதல் கொரோனா ஆய்வகம் கிண்டியில்தான் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு கொரோனா மையம் செயல்பட்டு வந்தது.

பாம்பு கடிக்கான மருந்துகளை தயாரிக்கும் பணிகள் கிண்டி கிங் ஆய்வகத்தில் மீண்டும் தொடக்கம்...!

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்த மருத்துவமனை சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதற்கிடையில் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2016-17ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின் போது அளிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையம் மேம்பாடு தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், "கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் 07.11.1899 அன்று நிறுவப்பட்டது.

பாம்பு கடிக்கான மருந்துகளை தயாரிக்கும் பணிகள் கிண்டி கிங் ஆய்வகத்தில் மீண்டும் தொடக்கம்...!

கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் தடுப்பு ஊசி மருந்து தயாரித்தலை மீண்டும் தொடங்கவும், திசு வங்கி ஏற்படுத்திடவும், பழைய கட்டடத்தில் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிக்க ஏதுவாக கட்டடத்தினை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காகவும், குளிர்சாதன வசதி ஏற்படுத்திடவும் 16.72 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான ஆய்வை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget