மேலும் அறிய

பெற்றோர்கள் கவனத்திற்கு! நீர்நிலைகளுக்குச் செல்லும் குழந்தைகள்... உயிரைப் பறிக்கும் அலட்சியம்!

புழல் ஏரியில் மூழ்கி மாயமான பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் 15 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு.

சென்னை அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் மூழ்கி நேற்று மாயமான 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் 15 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருமுல்லைவாயல் தாமரை நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராஜாவின் மகன் அகில்ராம் (14), அதே பகுதியை சேர்ந்த மோகனின் மகன் தருண் ஆகாஷ் (14).  இருவரும் அம்பத்தூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அகில்ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் தங்களுடன் படிக்கும் விக்னேஷ்வர், வைத்தீஸ்வரன் ஆகிய நண்பர்களுடன் முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இரு மாணவர்களும் கரைக்குத் திரும்பி, அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் துறையினர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், புழல் ஏரியில் மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த ஏழு நீச்சல் வீரர்கள், உள்ளூர் இளைஞர்களின்  உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டும் மாணவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

நீண்ட நேரத் தேடுதலிலும் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடலில் சிக்கியவர்களை மீட்பதில் அனுபவம் கொண்ட மெரினா மீட்புக் குழுவினர்களின் உதவியுடன் தேடுதல் பணி இன்று காலை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், சுமார் 15 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இரு சிறுவர்களையும், மெரினா மீட்பு குழுவினர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 

தங்களது பிள்ளைகளை இறந்த நிலையில் மீட்பு குழுவினர் ஏரி கரைக்கு கொண்டு வரும்போது ஏரிக்கரையில் மகன்களின் உடல்களை கட்டிப்பிடித்து பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க செய்தது. குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்களின் உயிரைப் பறித்த புழல் ஏரி சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Egmore-Tiruchy: இனி சென்னை டூ திருச்சி 130KM ஸ்பீடில் பறக்கலாம்..! 336KM-க்கு அப்க்ரேடாகும் ட்ராக் - ட்ராஃபிக் ஓவர்
இனி சென்னை டூ திருச்சி 130KM ஸ்பீடில் பறக்கலாம்..! 336KM-க்கு அப்க்ரேடாகும் ட்ராக் - ட்ராஃபிக் ஓவர்
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget