மேலும் அறிய

மன்னிப்பு கேட்கிறார், பெரிய விஷயமாக எடுக்க வேண்டாம் - பிரேமலதா விஜயகாந்த்

அன்னபூர்ணா உரிமையாளர் யதார்த்தமாக, நகைச்சுவையாகும் தான் அந்த கேள்வியை கேட்டார். இதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ தெரியல.

தேமுதிக 20 - ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவையொட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா  விஜய்காந்த்   கொடியேற்றி , கேப்டன் இல்லம் என்கின்ற பெயர் பலகை திறந்து வைத்து , இலவச மருத்துவ முகாம்,   டிஜிட்டல் வாயிலாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேசிய பிரேமலதா விஜயகாந்த் ;

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய இருபதாம் ஆண்டு தொடக்க விழா இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்களை நடத்தி தேமுதிக சார்பாக இன்றைக்கு கொண்டாட இருக்கிறோம்.

முப்பெரும் விழா என்னவென்றால் கேப்டன் அவர்களுக்கு பத்மபூஷண விருது கொடுத்தது, விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் மற்றும் , தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு துவக்க விழா இது மூன்றையும் முப்பெரும் விழாவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட இருக்கிறோம். 

மன வேதனையோடு தெரிவிக்கிறேன்

கேப்டன் இல்லாத முதல்  கட்சியின் துவக்கம் நாள் கொண்டாட்டம் இது இதை மனவேதனையோடு தெரிவிக்கிறேன். இன்று தலைமை கழகத்தில் கொடி ஏற்று இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கி இருக்கிறோம். அதுமட்டுமல்ல உறுப்பினர் சேர்க்கை முகமும் டிஜிட்டல் வாயிலாக துவங்க இருக்கிறோம். 

இதுவரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை அலுவலகம் அழைக்கப்பட்ட நம்முடைய அலுவலகம் இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்.

அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு 

ஜிஎஸ்டி என்பது அனைத்து தொழில்களும் அதாவது சிறு தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் ஜிஎஸ்டி என்ற ஒன்று , அவை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது அது யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஜி.எஸ்.டி வரி வந்த பிறகு அனைவருடைய வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

நகைச்சுவையாகவும் , யதார்த்தமாக கேள்வியை கேட்டார்

அன்னபூர்ணா உரிமையாளர் யதார்த்தமாக , நகைச்சுவையாகும் தான் அந்த கேள்வியை கேட்டார் இதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ அல்லது அவர்களை அவமதிக்கும் நோக்கில் பேசியதாக எனக்கு தெரியவில்லை அதே போல அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சரும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அதனை ஊடகங்கள் பெரிதாக்கியதால் தானாக முன் வந்து நிதி அமைச்சரே சந்திக்க வேண்டும் என அனுமதி பெற்று அதன் அடிப்படையில் சந்தித்து இருக்கிறார். அதில் அவர் மணிப்பூ  கேட்டிருக்கிறார் இவ்வளவு தான் அது அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானது பார்த்தேன் ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget