Udhayanidhi Stalin: தனது தொகுதியில், ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.. இதுதான் நடந்தது..
கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி அந்த வீட்டை உதயநிதி பார்வையிட்டுள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதி புதிய வீடு கட்டப்பட்டு திறந்து வைத்துள்ளார்.
திருவல்லிக்கேணியில் மிகவும் தாழ்வான வீட்டில் வசித்து வந்த குடும்பத்துக்கு, அந்த தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் புதிய வீடு கட்டிக்கொடுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாளில் அந்த புதிய வீடு திறந்து வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், தொகுதியில் அண்மையில் ஆய்வில் இருந்தபோது திருவல்லிக்கேணி குத்ரத்அலி மக்கான் தெருவில் பாஸ்கர்-ராதா தம்பதியின் மிகத்தாழ்வான வீடு மிகுந்த வருத்தத்தை தந்தது. அவர்களுக்கு புது வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்கினோம். கலைஞர் நினைவு நாளான இன்று அப்புது வீட்டை திறந்துவைத்தோம். வாழ்த்துகள்’ எனப்பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி அந்த வீட்டை உதயநிதி பார்வையிட்டுள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதி புதிய வீடு கட்டப்பட்டு திறந்து வைத்துள்ளார். இரண்டு மாதங்களில் வீட்டை கட்டி முடித்து அந்த குடும்பத்தினர் முகத்தில் புன்னகை வரவைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் உதயநிதியை பாராட்டியுள்ளனர்.
தொகுதியில் அண்மையில் ஆய்வில் இருந்தபோது திருவல்லிக்கேணி குத்ரத்அலி மக்கான் தெருவில் பாஸ்கர்-ராதா தம்பதியின் மிகத்தாழ்வான வீடு மிகுந்த வருத்தத்தை தந்தது. அவர்களுக்கு புது வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்கினோம். கலைஞர் நினைவு நாளான இன்று அப்புது வீட்டை திறந்துவைத்தோம். வாழ்த்துகள் pic.twitter.com/oYGzUySI4d
— Udhay (@Udhaystalin) August 7, 2021
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 3ஆவது நினைவு தினம் தமிழ்நாடும் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பல இடங்களில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் சார்பாக அந்தந்த பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்பிக்கள், திருவல்லிகேனி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இதேபோல், மறைந்த முதலமைச்சர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம் நெஞ்சங்களில் நிறைந்து நம்மை இயக்கும் தலைவர் கலைஞரின் நினைவுநாள்! தலைவரை - தமிழன்னையின் தலைமகனை நாம் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகின்றது. அவரது சொற்களும் எண்ணங்களும் நம் திசைமானி; அவர் காட்டிய வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் அமைப்போம்!’ எனப்பதிவிட்டார்.
நம் நெஞ்சங்களில் இருந்து நம்மை வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் புகழ்வணக்க நாளில், பெரும் விழாக்கள், அலங்காரங்களைத் தவிர்த்து இல்லங்களில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்திடுவோம்!
— M.K.Stalin (@mkstalin) August 5, 2021
அவர் வழியில் பயணித்துத் தமிழ்நாட்டை மாண்புறச் செய்வோம்!#LetterToBrethren pic.twitter.com/Cxz1lwfEgr
முன்னதாக, கொரோனா தொற்றால் வீட்டு வாசலிலேயே கருணாநிதியின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.