நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்! முக்கிய அறிவிப்புகள்
நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் 104 சேவை மையத்தில் , நீட் தேர்வு எழுதிய மாணவ , மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 104 மருத்துவ உதவி மையம் தொடங்கப்பட்டு, நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மற்றும் தேர்ச்சி பெற்றும் மருத்துவ வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த 104 ஆலோசனை மையம் பொறுத்தவரை, மனநல ஆலோசனை வழங்குவதை கடந்த மாணவர்களுக்கு எதிர்கால கல்விக்கு ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கையும் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் 134715 நபர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். 76181 தேர்ச்சி பெற்றனர் 59534 நபர்கள் தோல்வியுற்றனர். இந்த ஆலோசனை திட்டத்தில் 80 ஆலோசனையாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 600 - க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அலைபேசியில் ஆலோசனை வழங்கப்பட்டது. 70 சதவீத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்கள் மனம் தவறாமல் கல்வியினை மேற்கொள்ள வேண்டும் , பெற்றோர்கள் குழந்தைகளிடம் கோபம் கொள்ளாமல் பதற்றம் அளிக்காமல் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 59534 நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிட இலக்கினை நிர்ணயத்துள்ளோம்.
தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் என 75 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில் இளங்கலை சீட்டுகள் இருப்பது 11850 மட்டுமே , அது மட்டுமில்லாமல் பல் மருத்துவம் நர்சிங் பாராமெடிக்கல் என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ துறையில் சித்த ஆயுர்வேதம் , அலோபதி போன்ற படிப்புகளையும் தொடங்கலாம் எனவும் அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மனதில் சிறு அளவும் குழப்பம் இல்லாமல் இருக்க அரசு மாணவர்கள் மத்தியில் ஆலோசனை வழங்கி வருகிறது.
குறைந்த அளவிலான மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்வி பெற இயலாத மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது . மேலும் தனிமையை தவிர்க்க வேண்டும் . பயத்துடன், பதத்தட்டதுடன் இருக்கும் மாணவர்களை நிதானம் செய்யும் முறையில் ஆலோசனை தொடங்கப்படுகிறது.
16 கல்வி நிறுவனங்களிலிருந்து மனநல ஆலோசகர்கள் பயிற்சி வழங்குவதற்கு வந்துள்ளனர். மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு சுமை தான் , பொது தேர்வுகள் மட்டுமில்லாமல் நீட் தேர்வு அவர்களுக்கு பலுவாக தான் உள்ளது. அதற்க்கு முதலமைச்சர் தேர்வினை நீக்க முனைப்புடன் இருக்கிறார்.
பி.டி.எஸ் படிப்பிற்கு 32 ஆயிரம் மாணவர்கள் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.






















