மேலும் அறிய
Advertisement
ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு
சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதில்மனு தாக்கல் செய்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள கருத்துக்கள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வில், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கடந்த அக்டோபர் 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதில், மாவட்ட கிளப்புகள் சார்பில் ஒருவர் மட்டுமே வாக்களிக்க முடியும். சம்மந்தப்பட்ட கிளப் பரிந்துரை செய்யும் உறுப்பினர் மட்டுமே கிரிக்கெட் சங்க தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாவட்ட கிளப் பரிந்துரை செய்யாத வாக்காளர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் பட்டியலில் உள்ளதாகக் கூறி, துர்கேம்புடி சிவகேசவ ரெட்டி உள்ளிட்ட பலர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தேர்தல் அதிகாரி அறிவித்தபடி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்தலாம் எனவும், தேர்தல் முடிவுகள் இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி சங்கங்களுக்கான மாவட்ட பதிவாளர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்தல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிவகேசவ ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை, அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion