மேலும் அறிய

வீட்டு மனை பட்டா சிக்கல் தீர்வு ; நஞ்சை, புஞ்சை நில வகைப்பாடு மாற்றம் !! விரைவில் அரசாணை ?

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாக்களில், நில வகைப்பாடு நஞ்சை, புஞ்சை என இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்பட உள்ளது - வருவாய் துறை

வருவாய் துறை ஆவணங்களில் மாறுவதில்லை

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனைக்கு 2016 - ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து முறையான அங்கீகாரத்துடன் மனைகளை விற்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் பேரில் நகர், ஊரமைப்பு சட்டப்படி முறையான அங்கீகாரம் பெற்று, ரியல் எஸ்டேட் ஆணையத் தில் பதிவு செய்து, மனைகள் விற்பனை மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மனைப் பிரிவுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டாலும் வருவாய் துறை நில ஆவணங்களில் வகைப்பாட்டை மாற்றுவதில்லை.

விவசாய நிலம் - பதிவு செய்ய சார் பதிவாளர்கள் மறுப்பு

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 'டவுன் சர்வே' மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, நிலங்கள் வீட்டு மனைகளாக வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. பிற பகுதிகளில், பட்டாக்களில் நில வகைப்பாடானது  நஞ்சை அல்லது புஞ்சை என்றே குறிப்பிடப்படுகிறது. பதிவுத்துறை சட்டத்தின் 22 ஏ பிரிவின்படி, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்யக் கூடாது.

இதில் நகர், ஊரமைப்பு சட்டப்படி அங்கீகாரம் இருந்தாலும், பட்டாவில் சம்பந்தப்பட்ட நிலம் நஞ்சை அல்லது புஞ்சையாக இருப்பதால், அந்த பத்திரங்களை பதிவு செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. மனை அங்கீகாரத்துக்கான ஆவணங்கள் சரியாக இருந்தாலும், சில இடங்களில் சார் - பதிவாளர்கள், பட்டாவில் விவசாய நிலமாக இருக்கிறது எனக் கூறி பதிவு செய்ய மறுக்கின்றனர்.

அப்படியே சார் - பதிவாளர்கள் பதிவு செய்தாலும், தணிக்கையின் போது இது மோசடி என குறிப்பு எழுதப்படுகிறது. இதனால், சார் - பதிவாளர்களும், பொது மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள், வருவாய் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய் துறை உயரதிகாரிகள் கூறும் போது ;

பட்டா போன்ற ஆவணங்களில் நில வகைப்பாட்டை குறிப்பிடுவதற்கு, வருவாய் துறைக்கு என வழிமுறைகள் உள்ளன. அதன்படி, டவுன் சர்வே நடந்த பகுதிகளில் மட்டுமே, நிலங்கள் வீட்டு மனைகளாக குறிப்பிடப்படுகின்றன. பிற இடங்களில், முறையான அங்கீகாரத்துடன் உள்ள வீட்டு மனைகளை உரிய வகைப்பாட்டில் குறிப்பிட, விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும்

பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், வருவாய் துறையில் உயரதிகாரிகள் நிலையில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. டவுன் சர்வே நடக்காத பகுதிகளில், குடியிருப்பு பட்டாக்களில் குறிப்பிட வேண்டிய நில வகைப்பாட்டு விபரங்கள் குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget