Kilambakkam Skywalk: எல்லாம் மே மாதத்தில் முடியுது.. கிளாம்பாக்கம் ஸ்டேஷன் டூ பஸ் ஸ்டாண்ட்.. இனி ஈஸிதான்
Kilambakkam skywalk Update: "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதை (ஆகாய நடைமேடை) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Kilambakkam skywalk Opening Date: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டர் நீளத்திற்கு, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள உயர்மட்ட நடைபாதை வருகின்ற, மே மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam New Bus Stand
தென்மாவட்ட மக்களுக்கு செல்பவர்களுக்கு என பிரத்தேக பேருந்து நிலையமாக, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தபோது, பல்வேறு அடிப்படை வசதிகளில்லாததால் பயணிகள் அவதி அடைந்து வந்தனர்.
தொடர்ந்து படிப்படியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையம் இல்லாதது கிளாம்பக்கத்திற்கு வரும் பயணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam a New Railway Station
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்னக ரயில்வே உதவியுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டிய ரயில் நிலையம், பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, மே மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்மட்ட நடை பாதை Kilambakkam skywalk Bridge
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில், இருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி அடையும் வகையில், 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. விளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.
தாமதத்திற்கு காரணம் என்ன?
ரயில் நிலையம் நடைமேடையில் இருந்து, உயர்மட்ட நடைபாதைக்கு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட நடைபாதை பணிகளால், மற்றொரு ரயில் நடைமேடை அமைக்க தாமதமாக ஏற்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்த பத்து நாட்களில் இரண்டாவது நடைமேடை அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்க உள்ள உயர்மட்ட நடைபாதையில், 190 மீட்டர் நீளம் தனியார் வாசம் உள்ளதால் தாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிய அனுமதி பெற்று பணிகள் துவங்கப்பட்டிருப்பதால், ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் உயர்மட்ட நடைபாதையுடன் கூடிய ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | சென்னைக்கு இனி செங்கல்பட்டு தான்.. தலைகீழாய் மாறும் ரயில் நிலையம்.. எப்போது முடியும் ?





















