விமான நிலைய விவகாரம் :பரந்தூர் கிராம மக்களிடம் கருத்து கேட்கச்சென்ற விவசாய சங்கத்தினர் இருவர் கைது
இருவரை கைது செய்த காவல்துறையினர் மாலையில் விடுதலை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 30 (ii) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது.
MSP Guarantee Kisan Morcha wishes to request Mr @mkstalin, CM of Tamilnadu to kindly release Shri Palniappam, Coordinator, Movement against 8 Lanevway and Professor Gunasekhara Dharmaraja ( both State Coordinators of MSP GKM)...1/2
— Sardar VM Singh (@SardarVm) August 28, 2022
இச்சமயங்களில் இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். M.சுதாகர் , 30 ( ii ) காவல் சட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமல்படுத்த உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ( 24.08.22 ) முதல் 15 நாட்களுக்கு 30 ( ii ) காவல் சட்டத்தினை அமல்படுத்தியிள்ளனர். இதன்படி ஒரு கூட்டத்தைக் கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிளோ மற்றும் மேற்கண்ட கூட்டத்தை கூட்ட ஊக்குவிப்பவர்கள் காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெறவேண்டும் என காவல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதி மீறி பரந்தூர் கிராம மக்களிடம் கருத்து கேட்க சென்ற இருவரை கைது செய்துள்ளனர்.
Both have been detained by B1 Sivakanchi Police Station Kanchipuram for visiting the affected farmers of upcoming Paranthur Airport. 2/2@tnpoliceoffl @asianet
— Sardar VM Singh (@SardarVm) August 28, 2022
விவசாய சங்கத்தினர்
இந்நிலையில் எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று பாதிக்கப்படும் பொது மக்களிடையே கலந்துரையாட சென்ற பொழுது காவல்துறையினர் அவர்களை கைது செய்தது. பழனியப்பன் மற்றும் பேராசிரியர் குணசேகரன் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எட்டு வழி சாலை போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் சிவக்காஞ்சி காவல்துறையினர் கைது செய்தனர் காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்ட இருவரும் , மாலை ஏழு முப்பது மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.