மேலும் அறிய

காஞ்சிபுரம் : சாம்சங் ஊழியர்கள் திடீர் போராட்டம்... வேலை நிறுத்தத்தால் பரபரப்பு...!

சாம்சங் தொழிற்சாலை சிஐடியு சங்க ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு , தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை சிஐடியு சங்க ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொழிற்சாலை நிறைந்த மாவட்டம் 

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 

காஞ்சிபுரம் : சாம்சங் ஊழியர்கள் திடீர் போராட்டம்... வேலை நிறுத்தத்தால் பரபரப்பு...!

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது .

காஞ்சிபுரம் : சாம்சங் ஊழியர்கள் திடீர் போராட்டம்... வேலை நிறுத்தத்தால் பரபரப்பு...!

இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

ஊழியர்கள் குற்றச்சாட்டு 

தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று முதல் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் . இதன் அடிப்படையில் இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊழியர்களின் கோரிக்கை என்ன ?

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரித்திட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில் இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

காஞ்சிபுரம் : சாம்சங் ஊழியர்கள் திடீர் போராட்டம்... வேலை நிறுத்தத்தால் பரபரப்பு...!

போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..DMK PMK clash at Dharmapuri | திமுக- பாமக மோதல்! கைகலப்பான நிகழ்ச்சி! திணறிய POLICEManimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
Meiyazhagan Trailer:
Meiyazhagan Trailer: "என் அத்தான்" ரிலீசானது கார்த்திக்கின் மெய்யழகன் ட்ரெயிலர் - எப்படி இருக்குது?
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Embed widget