மேலும் அறிய
Advertisement
WATCH VIDEO: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் நடத்தி அசத்திய காஞ்சிபுரம் ஆட்சியர்
மாணவர்களிடம் ஆங்கிலம் இலக்கணம் குறித்த கேள்விகளை எழுப்பினார். பதில் தெரியாமல் இருந்த மாணவர்களிடம், காஞ்சிபுரம் ஆட்சியர் அர்த்தி எவ்வாறு அதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார்
காஞ்சிபுரம் அருகே உள்ள காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வகுப்பறைகளில் நுழைந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார்.
இதை தொடர்ந்து 5 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு,மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆசிரியையாக மாறி வகுப்பறை கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கண பாடத்தை படிக்க வைத்து அதற்கான விளக்கத்தை மாணவ - மாணவிகளுக்குகூறி பாடம் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அப்போது மாணவர்களிடம் தொடர்ந்து ஆங்கிலம் இலக்கணம் குறித்த கேள்விகளை எழுப்பினார். பதில் தெரியாமல் இருந்த மாணவர்களிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அர்த்தி எவ்வாறு அதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து பல மாணவர்களிடம் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லி சோதனை செய்தார். சரியாக படிக்காத மாணவர்களை திருத்தியது, மட்டுமில்லாமல் ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள், மாணவர்கள் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் கிளாஸில் இருப்பதால் தொடர்ந்து பயிற்சி அளியுங்கள் என கோரிக்கை வைத்தார்.
காஞ்சிபுரம் அருகே காலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தி அசத்திய ஆட்சியர் ஆர்த்தி.#kanchipuram #காஞ்சிபுரம் pic.twitter.com/DpdjLjAtkr
— Kishore Ravi (@Kishoreamutha) December 17, 2021
பின்னர் பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகளிடம் மாணவ மாணவிகளுக்கு முறையாக பாடம் நடத்த உத்தரவிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியையாக மாறி பாடம் நடத்தி அசத்திய மாவட்ட ஆட்சியரின் செயலை கிராம மக்களும், ஆசிரியர்களும் வியந்து , வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion