மேலும் அறிய
இன்பச் செய்தி மக்களே.. மதுரை, கொச்சி, கோவா ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள்..!
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, மதுரை, கொச்சி, கோவா நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மதுரைக்கு 12 விமானங்களில் இருந்து 16 விமானங்களாகவும், கொச்சிக்கு 8 விமானங்களில் இருந்து, 10 விமானங்களாகவும், கோவாவிற்கு 4 விமானங்களில் இருந்து 6 விமானங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பயணிகளிடையே மகிழ்ச்சி
சென்னை ( Chennai Airport ) : சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், அதை போல் மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் 6 விமானங்களும், சென்னை-மதுரை-சென்னை இடையே நாள் ஒன்றுக்கு இதுவரையில், 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றிலிருந்து கூடுதலாக சென்னை-மதுரை இடையே 2 சேவைகளும், மதுரை-சென்னை இடையே 2 சேவைகளும், தினமும் இனிமேல் சென்னை- மதுரை- சென்னை இடையே 16 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு விமான சேவை அதிகரித்துள்ளது, தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-கொச்சி இடையே..
அதைப்போல் சென்னை-கொச்சி இடையே இதுவரை தினமும்,4 விமான சேவைகள் உள்ளன. அதைப்போல் கொச்சி-சென்னை இடையே 4 விமான சேவைகள் மொத்தம் 8 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இன்றிலிருந்து சென்னை-கொச்சி இடையே கூடுதலாக ஒரு விமான சேவையும், கொச்சி-சென்னை இடையே கூடுதலாக ஒரு விமான சேவையும் இயக்கப்படுகின்றன. இதனால் இன்றிலிருந்து சென்னை-கொச்சி- சென்னை இடையே நாள் ஒன்றுக்கு 10 விமான சேவைகள் இயக்கப்படுகிறது. கொச்சிக்கு விமான சேவையை அதிகரித்துள்ளது, கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை-கோவா- சென்னை
அதைப்போல் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவிற்கு, சென்னையில் இருந்து இதுவரையில் காலை ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது. அதைப்போல் கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்து. இப்போது சுற்றுலா பயணிகள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, இன்றிலிருந்து மதியம் 1:50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவிற்கு ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு, அதைப்போல் அந்த விமானம், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்கிறது. இதை அடுத்து இன்றிலிருந்து சென்னை-கோவா 3 விமானங்களும், கோவா-சென்னை 3 விமானங்களும், நாள் ஒன்றுக்கு சென்னை-கோவா- சென்னை இடையே 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவாவிற்கு விமான சேவை அதிகரித்துள்ளது சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion