இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கம் !! தங்கம் விலை குறையுமா ?
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

3 புதிய தங்க சுரங்கம்
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையில் ;
ஒடிஷா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய தங்க சுரங்கம் ஏற்படுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒடிஷாவின் தியோகார், கோஞ்சார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 685 கிலோ கச்சா தங்கக் கட்டிகளை இந்திய புவியியல் ஆய்வமைப்பான ஜி.எஸ்.ஐ., கண்டறிந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் கண்டறியப்பட்டுள்ள பகுதியில், லட்சக்கணக்கான டன் கச்சா தங்கக் கட்டிகள் கிடைக்கலாம் என்றும், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் தனியார் இடத்தில், 750 கிலோ தங்கம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள தங்க சுரங்கங்களால், அன்னியச் செலாவணி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கலுக்கு 12 சதவிகித வரியா ? வலுக்கும் எதிர்ப்புகள்
இந்தியாவில் 12 சதவீதம் என்ற ஜி.எஸ்.டி., வரி விகிதமே இல்லாத நிலையில், செங்கல்லுக்கு 6 சதவீதம், 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை மார்பிள், கிரானைட் கற்களுக்கு போல, 5 சதவீதமாக மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அனைத்து வகை பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பின் கீழ் 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை விதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வரிசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது 5 சதவீதம், 18 சதவீதம் என்ற இரண்டு விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பே இப்போது இல்லாத நிலையில் செங்கல், பிளைஆஷ் செங்கல்லுக்கு மட்டும் இரண்டு விதமான வரி விதிக்கப்படுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் துணைத் தலைவர் ஜெயராஜ் கூறியதாவது ;
ஜி.எஸ்.டி., அமல்படுத்துவதற்கு முன், ஒரு மாத செங்கல் உற்பத்திக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை 'காம்பவுண்டிங்' வரியாக விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீஹார் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது. இந்த தொகையை செலுத்தினால், வரி பராமரிப்பு கூட செய்ய வேண்டியதில்லை.
அதைத் தான் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிலும் கேட்டோம். அதற்கு பதிலாக 'ஸ்பெஷல் காம்பவுண்டிங்' என்ற பெயரில் 5 சதவீதமாக இருந்த வரியை 6 சதவீதம் என்றும் உள்ளீட்டு வரியுடன் 12 சதவீதமாகவும் மாற்றியது மத்திய அரசு. மூன்றாண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை பலனில்லை. எல்லா பொருட்களும் 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வரிக்கு மாற்றப்பட்ட நிலையில் செங்கல், பிளைஆஷ் செங்கல்லுக்கு மட்டும் 6 சதவீதம், 12 சதவீத வரியே நீடிக்கிறது. அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்





















