மேலும் அறிய

SSC: எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்..!

மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பன்முகப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை, திருவள்ளூரில் நடத்தப்பட இருக்கிறது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பன்முகப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எஸ்.எஸ்.சி. பல்திறன் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 11 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மற்றும் திருவள்ளூஉர் மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்: 

எஸ்.எஸ்.சி. பணியிட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் உதவி செய்யும் வகையில் இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கீழ் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களான கிண்டி கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், கண்ணகி நகர் கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், மாநிலக் கல்லூரி கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பயன்பெறலாம்.

தொடர்பு எண்கள்:

கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியிலும் தன்னார்வ பயிலும் வட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு, 94 99 96 60 26, / 94 99 96 60 23/  88 70 97 66 54 /  78 11 86 39 16, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போலவே, திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில், பயிற்சி மையத்தில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி மற்றும் படிப்புக்கு தேவையான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மக்கள் எங்கள் மெய்நிகர் கற்றல் போர்ட்டலிலும் அனைத்து மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் தொடர்பான குறிப்புகளையும் அணுகலாம்.

பணி விவரம்: 

மத்திய ஆட்சேர்ப்பு முகமை சார்பில், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

இந்த நிலையில், எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம். 

நேரடியாக சலான் முறையில் கட்டணம் செலுத்த பிப்ரவரி 20 கடைசி ஆகும். விண்ணப்பப் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப் பணியிடங்கள்

பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் - 529 பணியிடங்கள்

கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது. 

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தேர்வு முறை

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. 

ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்யவும். 

* முகப்புப் பக்கத்தில் Apply க்ளிக் செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* அதில் தோன்றும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022" என்ற பக்கத்தைச் சொடுக்கவும். 

* லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும் 

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget