மேலும் அறிய

அடுக்குமாடி குடியிருப்பில் இனிமேல் இது காட்டாயம் !! அரசு அதிரடி உத்தரவு

அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் , மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி ஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் வகையில், பொது கட்டட விதிகள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

மின்சார வாகன பயன்பாடு அதிகம்

நாடு முழுவதும் , மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், பெட்ரோல், டீசல் செலவை குறைக்க மின்சார வாகனங்கள் வாங்குகின்றனர். தற்போதைய நிலவரப்படி கார், மோட்டார் பைக் மட்டுமின்றி, பஸ் போன்ற வாகனங்களையும், மின்சாரத்தால் இயக்கும் நிலை வந்து விட்டது.

மின்சார வாகனங்களின் பேட்டரியை, குறிப்பிட்ட இடைவெளியில் சார்ஜிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில நிறுவனங்கள் பொது இடங்களில் 'சார்ஜிங்' வசதியை ஏற்படுத்த முன்வந்தன. எனினும், இதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயம் என, கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

பொது கட்டட விதிகளில் திருத்தம்

கட்டட விதிகளை திருத்தும்படி , மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பொது கட்டட விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது. தமிழகத்தில் எட்டு வீடுகள் உள்ள மற்றும் 8,072 சதுர அடிக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு, 'சார்ஜிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் வீடுகளின் எண்ணிக்கை, 50 - க்கும் மேல் இருந்தால், அந்த வளாகத்தில் வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு விரைவாக, 'சார்ஜிங்' செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். தொழில், வணிக நிறுவன கட்டடங்களின் பரப்பளவு, 3,229 சதுர அடிக்கு மேல் இருந்தால் அங்கு வாகன நிறுத்துமிடத்தில், 10 சதவீத இடத்தை சார்ஜிங் வசதிக்காக ஒதுக்க வேண்டும்.

இந்த இடங்களில் விரைவாக சார்ஜிங் செய்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பொது கட்டட விதிகளில் குறிப்பிட்ட சில பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விபரம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா

Embed widget