மேலும் அறிய

இ - சேவை மனுக்களுக்கு இனி 45 நாட்கள் அவகாசம் ! பட்டா , சான்றிதழ் தாமதத்திற்கு தீர்வு வருமா ?

இ - சேவை மையங்களில் பதிவு செய்யப்படும் பட்டா பெயர் மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசத்தை 30 - ல் இருந்து 45 நாட்களாக உயர்த்தி வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

இ - சேவை மூலம் விண்ணப்பம்

தமிழகத்தில் சொத்து வாங்குவோர் , பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், வாரிசு சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் போன்றவற்றை பெறவும் , இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவ டலர்களுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பப்படும்.

இது தொடர்பாக , சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதற்கு மேல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் , சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முடிவு எடுக்காமல் நிராகரிப்பு

இருப்பினும் பெரும்பாலான இடங்களில் , பட்டா மாறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் , 30 நாட்களில் முடிவு எடுக்காமல் நிராகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்டத்துக்காக முகாம்கள் நடத்தப்பட்டு , பொதுமக்களிடம் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த மனுக்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது முடிவு எடுக்க , 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டி , 'இ - சேவை' மையங்கள் வாயிலாக பெறப்படும். மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும் 45 நாட்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என , வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்ற வருவாய் துறை உயரதிகாரிகள் , பட்டாவில் பெயர் மாற்றம் , வாரிசு சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க , 45 நாட்கள் வரை அவகாசம் அளித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து , வருவாய் துறை அதிகாரி கூறியதாவது ; 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கமான மனுக்களுக்கும் 45 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதே நேரம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான , 45 நாட்கள் அவகாசத்தை 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் துறையின் பரிசீலனையில் உள்ளது என இவ்வாறு கூறினார்.

தலைப்பு செய்திகள்

" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
“ரூ.10,000-ல் தொழில் திறன்! சென்னையில் 5 நாள் லேப்டாப் பயிற்சி – அரசு சான்றிதழ் இலவசம்!”
“ரூ.10,000-ல் தொழில் திறன்! சென்னையில் 5 நாள் லேப்டாப் பயிற்சி – அரசு சான்றிதழ் இலவசம்!”
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget