மேலும் அறிய

பேருந்து பயணிகளுக்கு இனி குஷி தான் !! மீண்டும் சென்னைக்கு வரும் இரட்டை அடுக்கு பேருந்து

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன

சென்னைக்கு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து

சென்னையில் 1970-களில் இரட்டை அடுக்கு பஸ்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. சுமார் 10 ஆண்டுகள் இந்த பஸ்கள் சென்னையில் இயக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1980-களில் இரட்டை அடுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997-ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பஸ்கள் மீண்டும் சென்னையில் இயக்கப்பட்டன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை இரட்டை அடுக்கு பஸ்கள் வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலாப் பயணத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது ; 

சென்னை நகரச் சாலைகளில் ஒரு காலத்தில் பயணிகள் மிகவும் விரும்பிப் பயணம் செய்த இரட்டை அடுக்கு பஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இந்த முறை அவை தினசரிப் பயணத்துக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரச் சுற்றுலாவுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. சுற்றுலா செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்

இந்த பஸ்கள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித் தடங்களில் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பஸ்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும். வழித்தடத் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படும். இரட்டை அடுக்கு மின்சாரப் பஸ்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. சாதாரண மின்சாரப் பஸ்களைவிட 1.5 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சென்னையில் மாநகரப் பஸ்களில் அடிக்கடி நெரிசல் காணப்படும் நிலையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இந்த இரட்டை அடுக்கு பஸ்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Embed widget