மேலும் அறிய
Chennai Traffic Fines: மதுபோதையில் டிரைவிங்.. 5 மாதங்களில் 15 கோடி அபராதம்..! 'தண்ணி'யில் தடுமாறும் தலைநகரம்..!
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.15.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராதம்
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.15.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் இருந்த 14 லட்சத்து 13 ஆயிரத்து 638 வழக்குகளில் ரூ.15 கோடியே 13 லட்சத்து 66 ஆயிரத்து 600 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அபராதம் செலுத்தாவிட்டால் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement