எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி: என்ன தெரியுமா ?
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.
பிரட் , பிஸ்கட் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை அப்புறப்படுத்த அதிகாரிகளும் , ஊழியர்களும் , தொடர்ந்து களப்பணி செய்து வருகின்றனர்.
சென்னை திருவல்லிகேணி பகுதியில் உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிகேணி அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு போர்வை, பிரட் , பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சேப்பாக்கம் - திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களையும் ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாய்யையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து பருவ மழையை எதிர் கொண்டோம். வரும் நாட்களில் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி. பின்னர் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை குறித்த கேள்விக்கு , சென்னையில் மழை நீர் தேங்காாமல் நிற்கிறது இதுவே வெள்ளை அறிக்கை தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.