மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
செங்கல்பட்டில் 7 மாணவர்கள் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி...!
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலை பள்ளியில் ஒரு மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல் மதுராந்தகம் அரசு உதவி பெறும், இந்து மேல்நிலைப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் இந்து மேல்நிலைப்பள்ளி சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழுப்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு, அச்சரபாக்கம் அரசு மேல்நிலை மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பாதித்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 7 ஆகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி, செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாக இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூர், நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது செங்கல்பட்டிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion