வாட்ஸ் - அப் காலில் ஆசை வார்த்தை கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய ஊழியர்
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறித்துவ ஆலைய பணியாளர். தனியார் தங்கும் விடுதியில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை

வாட்ஸ் - அப்பில் ஆசை வார்த்தை
சென்னை அம்பத்தூர் அடுத்த மாதன்குப்பம் பகுதியில் வானத்தின் வாசல் என்ற பெயரில் கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்திற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் பிராத்தனைக்காக வருவது வழக்கம்.
இதில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் பிராத்தனைக்காக வானத்தின் வாசல் ஆலயத்தில் வந்திருந்தனர். அதே ஆலயத்தில் ஏசுதாஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் மூன்று சிறுவர்களிடமும் நட்பாக பழகியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஏசுதாஸ் வாட்ஸ் அப் கால் மூலம் ஆசை வார்த்தை கூறி பேசி அவர்களை தனியார் தங்கும் விடுதிக்கு வரவழைத்து சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக நடந்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த தனியார் தங்கும் விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அம்பத்தூர் உதவி ஆணையர் தலைமையிலான மூன்று தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட ஏசுதாஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்தனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து வெட்டிய கும்பல்
சென்னை தண்டையார் பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது 20 ). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கொடுங்கையூர் எழில் நகர் வழியாக தனது நண்பர் முஜ்பூர் ரகுமானுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். முஜ்பூர் ரகுமான் இருசக்கர வாகனத்தை ஓட்டி உள்ளார். அப்பொழுது இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் முஜ்பூர் ரகுமான் ஒட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறி துரத்தி வந்துள்ளனர்.
இருசக்கர வாகனம் கொடுங்கையூர் எழில் நகர் சிறிய மேம்பாலம் அருகே வந்த போது துரத்தி வந்த நபர்கள் முஜ்பூர் ரகுமான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி உள்ளனர்.
இதில் இரு சக்கர வாகனத்தை ஒட்டி வந்த முஜ்பூர் ரகுமான் தப்பித்து ஓடினார். பின்னால் அமர்ந்திருந்த சரவணனை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் வயிறு , மார்பு , தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தண்டையார் பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்த அருண் என்கின்ற பங்காரு ( வயது 19 ) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் மூஜ்பூர் ரகுமான் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அருணை இடிப்பது போல வந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த அருண் சரவணனை வெட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து அருண் என்கின்ற பங்காரு மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறு வனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.





















