மேலும் அறிய
Advertisement
chess olympiad 2022: கலை கட்டும் சென்னை: ஒரே நாளில் 150 வீரர்கள் வருகை - காவல் கட்டுக்குள் வந்த விடுதி
மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள, வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் சென்னைக்கு விமானங்களில் வரத்தொடங்கினா்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இம்மாதம் 28 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை என மொத்தம் 14 நாட்களுக்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கிறது. இதில் 2000 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் விமானம் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலையிலிருந்து இரவு 9 மணி வரை 150 விளையாட்டு வீரர்கள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை தமிழக அரசு நியமித்துள்ள சிறப்பு அலுவலர்கள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் வரவேற்புக் குழுவினர் விளையாட்டு வீரர்களை வரவேற்று, தனி வாகனங்களில் ஏற்றி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர் அதனைத் தொடர்ந்து இனி வருபவர்களை அரசு நியமித்துள்ள சிறப்பு பேருந்துகளைக் கொண்டு அவர்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்க்க உள்ளனர் தமிழக அரசு நியமித்துள்ள சிறப்பு குழுவினரு மற்றும் செஸ் ஒலிம்பிக் வரவேற்பு குழுவினரும்.
மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள,வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் சென்னைக்கு விமானங்களில் வரத்தொடங்கினா். pic.twitter.com/AGZgSUvhNM
— Kishore Subha Ravi (@Kishoreamutha) July 26, 2022
செர்பிய நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் முதல்முறையாக இந்தியாவிற்கு செஸ் விளையாட வந்துள்ளேன். இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறந்த முறையில் நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion