மேலும் அறிய

வீட்டில் சொல்ல தயக்கம்... மணமேடையில் மயக்கம்.. காதலால் சாதுர்யமாக திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

சென்னை பாடியில் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த மணமகள் மயங்கி விழுந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பாடி அவ்வை தகரை சேர்ந்தவர் 35 வயதான செல்வம். இவர் ஒரு எம்இ முதுகலை பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், தாம்பரம் பெரியார் நகரை சேர்ந்த எம்இ, எம்பிஏ படித்த 31 வயதான கீர்த்தனா என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருதரப்பும் கல்யாணவேலைகளில் தீவிரமாக மூழ்கியது.

பத்திரிகை அடிப்பது, பட்டுப்புடவை, முகூர்த்த புடவை எடுப்பது போட்டோ வீடியோவுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலை வண்ணாரப் பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் நடக்க இருந்த திருமணத்துக்கு இரு குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் குவிந்து இருந்தனர். மணமகன் செல்வம் திருமண உடையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாராக இருந்தார். அதேபோல மணமகளும் ஆடை அலங்காரத்துடன் தயாராக இருந்துள்ளார். 

இந்த நேரத்தில் தான் திடீரென மணமேடையில் இருந்த கீர்த்தனா மணமேடையில் மயங்கி சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் மணமகன் தரப்பினர் உடனடியாக வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத் துவர்கள் ரத்த அழுத்தம், பல்ஸ் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று சொல்லி முடிக்கும் நேரத்தில், மணமகள் கீர்த்தனா திடீரென எழுத்து உட்கார்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்பிறகு, இதைபார்த்த பெற்றோர். மணமகன் சந்தோஷம் அடைந்தனர். ஆனால், அந்த சந்தோஷம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. 

காரணம், மணமகள் கீர்த்தனா, தன் பெற்றோரிடம் எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரை தான் திருமணம் செய்வேன். இந்த திருமணத்தை நிறுத்த நான் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, இந்த திருமணத்தை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அதனால்தான் மயங்கியதாக நடித்தேன் என்று கூறினார். இதனால் தலையில் இடி இறங்கியது போல அவரது பெற் றோர் அப்படியே நின்றனர். இதை முன்பே சொல்லியி ருக்காலாமே என்று கேட்டபோது, நான் சொன்னால் நீங்கள் கேட்கும் மூடில் இல்லை என்று அசால்டாக பதில் அளித்துள்ளார். இந்த காட்சிகளைபார்த்துகொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் என் மகனை மணமேடை வரை அழைத்து வந்து அசிங்கப்படுத்திவீட்டீர்கள் என்று கூறி வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் போலீசில் மணமகன் செல்வம் புகார் அளித்தார்.

அதில் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பட்டுப்புடவை, தங்க நகைகள், திருமணத்துக்கு ஆன செலவுகளை தர வேண்டும். அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்த காவல்துறையினர் பொருட்களை வாங்கி கொடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.  திருணத்தை நிறுத்த மணப்பெண் நடத்திய நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget