Chennai Metro: இதன் காரணமாக மெட்ரோ ரயில் தாமதமாகும் - அறிவித்த மெட்ரோ நிர்வாகம்
சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு- இன்று சென்னை மெட்ரோ ரயில் தாமதமாக இயக்கப்படும். மெட்ரோ நிர்வாகம்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் சிறிது தாமதமாக இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தாமதமாக இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் வழக்கமான 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்று இயக்கப்படும். பரப்பரப்பாக இல்லாத நிலையில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என்று இயக்கப்படும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு தாமதமாக இயக்கபப்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Chennai Metro Train services to be delayed by 10 minutes due to technical glitch pic.twitter.com/Rhfk3GnMO6
— Chennai Metro Rail (@cmrlofficial) June 24, 2022
எப்போதும் பரபரப்பாக இருக்கும் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஒரு மணி நேரமாக சிக்னல் சரியாக கிடைக்காததால மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தம்.
தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக மெட்ரோ ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்புhttps://t.co/FqpsitUmZL#Metro
— ABP Nadu (@abpnadu) June 24, 2022
தொழில்நுட்ப கோளாறு சீரானதும் இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று வார இறுதிநாள் என்பதாலும், பலரும் பணிக்கு சென்றும் வீடு திரும்பும் நேரம் என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமானதே. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து சிக்னலில் சிறு கோளாறு காரணமாக மெட்ரோ இரயில் இயக்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெரிசல்மிகு நேரத்திலும் இரண்டு வழித்தடங்களில் செல்லும் மெட்ரோ இரயில்கள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை சற்று தாமதமாக இயக்கப்படும்.
மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இந்த சிக்னல் கோளாறு உடனடியாக சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். கோளாறு மாலை 4.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக கண்டறிந்து அதனை சீர் செய்யும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
மெட்ரோ பயணிகள் தங்கள் பயணத்தை வழக்கம்போல் தொடரலாம் என கேட்டுகொள்கிறோம். மெட்ரோ இரயிலின் 10 நிமிட தாமதத்திற்கு பயணிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். இந்த சிமிக்கை கோளாறு சரிசெய்த உடன் மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கிறோம். ” என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்