மேலும் அறிய
சென்னை அசோக் ரெசிடென்சியில் வருமானவரி துறையினர் தீவிர சோதனை
இரண்டு வாகனங்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அதிரடி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு, கணக்கில் வராத பணம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் 6-அவென்யூவில் உள்ள உள்ள ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு 4 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்தூறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் காஞ்சிபுரத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மணலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அசோக் ரெசிடென்சிக்கு சொந்தமான ஹோட்டல்கள், அலுவலகங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் காலை 7:00 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அய்யப்பன் தாங்கலில் உள்ள அசோக் ரெசிடென்சியில் இரண்டு கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகள் வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலும் உள்ளே இருந்தவர்களின் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகு உள்ள அனுமதிக்கப்பட்டனர். ரெசிடென்சிக்கு தேவையான பொருட்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ரெசிடென்சியில் எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை தீவிரமாக சோதனை செய்து வரும் நிலையில் இங்குள்ள கம்ப்யூட்டர்கள், அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை தீவிரமாக சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரிய வரும் என தகவல் வெளியானது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion