மேலும் அறிய
Advertisement
குழந்தைகளின் நலனை கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் - தம்பதிக்கு நீதிபதி அறிவுறுத்தல்
அகம்பாவமும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும்.
அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைக்ளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது நான்கு வயது குழந்தையை கடத்திச் சென்று, கணவர் சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதால், குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கணவனை பிரியும் முன், மனுதாரர் தனது குழந்தையை, வேண்டுமென்றே கணவரிடம் விட்டுச் சென்றுள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை வளர்ந்து வரும் நிலையில் அதை சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது எனவும், அகம்பாவம் உறவை கெடுத்து விடும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அகம்பாவம், சகிப்பு தன்மையின்மையை காலணிகளாக வீட்டுக்கு வெளியில் விட்டு செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர் எனவும், கணவர் அடிமரம் எனவும் மற்ற உறுப்பினர்கள் கிளைகள் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும் என்பதால், கணவன் - மனைவி தங்கள் குழந்தைகளின் நலனை கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
விழுப்புரம்
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion