Chennai Ford: 3 வருடம் காத்திருப்பு.. மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
Ford chennai plant revival: மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ரூ.900 கோடியிலிருந்து 2700 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Ford chennai plant latest news tamil: சென்னை ஃபோர்டு தொழிற்சாலை, மீண்டும் தனது உற்பத்தியை விரைவில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபோர்டு கார் நிறுவனம் - Ford Car
உலக அளவில் ஃபோர்டு நிறுவனம் முன்னணி கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்து வந்தது.
இதன் மூலம் இரண்டு தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கான, இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக சரியத் தொடங்கியது. தொடர்ந்து தொழிற்சாலையில் கார் உற்பத்தியும் படிப்படியாக அந்த நிறுவனம் குறைத்து வந்தது.
இந்தியாவிலிருந்து வெளியேறிய ஃபோர்டு நிறுவனம்
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடியது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725 கோடி ரூபாய்க்கு, வாங்கியது.
சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு முயற்சி
ஃபோர்டு தொழிற்சாலை இந்தியாவிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக சென்னை தொழிற்சாலையை பல்வேறு நிறுவனங்கள் வாங்க முயற்சி மேற்கொண்டன. இறுதியில் தமிழ்நாடு அரசு ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேரடியாக ஃபோர்டு நிறுவன ஊழியர்களை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
புதிய அப்டேட் என்ன ? - Ford Chennai Plant Revival
மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ரூ.900 கோடியிலிருந்து 2700 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும், திட்டத்தை கைவிட்டு விட்டது என செய்திகள் வெளியாகின.
உலகச் சந்தைக்கான உற்பத்திக்கு சென்னை ஆலையை பயன்படுத்துவதில் சென்னை போர்ட் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போது உற்பத்தி துவங்கும், எந்த வகையான கார்கள் உற்பத்தி செய்யப்படும் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















