மேலும் அறிய

Chennai : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு...சென்னையில் புறநகர் சேவையில் மாற்றம்...எப்போதிருந்து தெரியுமா...?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 6 வழிகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்-நெல்லூர், மெரினா கடற்கரை-தாம்பரம், மெரினா கடற்கரை-விழுப்புரம் ஆகிய தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் மேற்கண்ட சில வழித்தடங்களில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

  • மூர் மார்க்கெட்- பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே வழக்கமாக இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 
  • அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்-ஆவடி இடையே வழக்கமாக இரவு 11.55க்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி ரத்து செய்யப்படும். 
  • பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்-மூர் மார்க்கெட்டுக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி மற்றும் மூர் மார்க்கெட் பகுதியாக ரத்து செய்யப்படும்.
  • மூர் மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் மற்றும் வியாசர்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் மூர் மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் மூர் மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மூர் மார்க்கெட் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கொருக்குபேட்டை மற்றும் மூர் மார்க்கெட் இடைய பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை- திருவள்ளுர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.
  • சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.
  • சென்ட்ரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.
  • மூர் மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது, மூர் மார்க்கெட்டில் இருந்து 11 மணிக்கு இயக்கப்படும்.
  • மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டியில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது, முர் மார்க்கெட்டில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.

இந்த மேற்கண்ட மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget