மேலும் அறிய

சென்னைக்கு 4889 ஓட்டு மெஷின்.. எந்த தொகுதிக்கு எத்தனை வாக்கு இயந்திரங்கள்? இதான் டேட்டா வாக்காளர்களே!

சென்னையில் உள்ள 16 தாெகுதிகளில் எந்த தொகுதிக்கு எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள்? எத்தனை விவி பேட் இயந்திரங்கள்? எத்தனை கட்டுப்பாட்டு கருவிகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. எந்தெந்த தொகுதிகளுக்கு எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள்? விவி பேட் இயந்திரங்கள்? என்பதை கீழே காணலாம்.

     சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் விவி பேட் இயந்திரங்கள்
ஆர்.கே.நகர் 295 295 319
பெரம்பூர் 357 357 387
கொளத்தூர் 343 343 371
வில்லிவாக்கம் 306 306 331
திரு.வி.க.நகர் 267 267 289
எழும்பூர் 240 240 260
ராயபுரம் 232 232 252
துறைமுகம் 230 230 249
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 282 282 305
ஆயிரம் விளக்கு 296 296 321
அண்ணாநகர் 327 327 354
விருகம்பாக்கம் 373 373 404
சைதாப்பேட்டை 338 338 366
தியாகராய நகர் 301 301 326
மயிலாப்பூர் 326 326 353
வேளச்சேரி 376 376 408
மொத்தம் 4889 4889 5295

சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளுக்கு மொத்தமாக 4 ஆயிரத்து 889 வாக்கு இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. சென்னையிலே வாக்காளர்கள் 2வது அதிகம் உள்ள வேளச்சேரி தொகுதியில் 376 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படு உள்ளது. வேட்பாளர்கள் அதிகம் உள்ள பெரம்பூர் தொகுதியில் 357 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 343 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அங்கு 387 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

28 லட்சம் வாக்காளர்கள்:

சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வரை வாழ்ந்தாலும் இங்கு வாக்காளர்கள் 28 லட்சம் பேர் உள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பெரும்பாலும் வசித்து வருகின்றனர். சென்னையில் பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. 

சென்னையில் வாக்குப்பதிவிற்கு பிறகு வாக்கு இயந்திரங்களை வைக்க உள்ள வாக்கு எண்ணும் மையங்களையும் தயார் செய்யும் பணியிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. சென்னை மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போதுமான வாக்கு இயந்திரங்களை அனுப்புவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

பணிகள் தீவிரம்:

மேலும், வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு இயந்திரங்கள் வாக்குப்பதிவின்போது எந்த வித இயந்திரக் கோளாறுக்கு ஆளாத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திமுக-வின் கோட்டையாக திகழ்ந்து வரும் சூழலில் இந்த தேர்தலில் அவர்களுக்கு கடும் சவால் அளிக்க அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக களத்தில் இறங்கியுள்ளது.

 

 

 

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget