Watch Video: மீன் வலையில் சிக்கி கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள்.. காப்பாற்றும் சுங்கத்துறை அதிகாரிகள்- வைரல் வீடியோ !
கடலில் சிக்கிய ஆலிவ் ரிட்லி ஆமையை சுங்கவரித்துறை அதிகாரிகள் காப்பாற்றியுள்ள வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
சென்னை சுங்கவரித் துறையினர் வழக்கமாக கடற் பகுதியில் ரோந்து பணி சென்று வருவார்கள். அந்தவகையில் கடந்த 30ஆம் தேதி அவர்கள் ரோந்து பணிக்கு செல்லும் போது ஒரு ஆலிவ் ரிட்லி கடல் ஆமை ஒன்று மீன் பிடி வலையில் சிக்கியுள்ளதை பார்த்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதை மீட்டு வலையிலிருந்து எடுத்து திரும்பி கடலுக்குள் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை சுங்க வரித்துறை சார்பில் ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் மீன் வலையில் சிக்கிக் கொண்டு அந்த ஆலிவ் ரிட்லி ஆமை தவிக்கும் காட்சிகள் தெளிவாக இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த ஆமையை சுங்க வரித்துறையினர் கப்பலில் இருந்து மீட்டு அதன்மீது சிக்கி இருந்த வலையை நீக்கி பத்திரமாக கடலில் விடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
During monthly Coastal Security Drill "SAJAG-01/22" on 30/1/22, Rummaging Team of Chennai Customs on sea patrolling duty rescued a Sea Turtle(Olive Ridley) badly entangled in fishing net battling for life in high seas & let into the sea safely. #SaveEndangeredSpecies @cbic_india pic.twitter.com/LyV2xU5bOO
— Chennai Customs (@ChennaiCustoms) February 1, 2022
இந்த வீடியோவை பலரும் பார்த்து சுங்கத்துறை அதிகாரிகளின் செயலை பாராட்டி வருகின்றனர்.
Great job👍👌
— shravya (@s_shravya) February 1, 2022
Excellent work by the officers@chennaicustoms
— Dinesh Damodaran (@suryaolly) February 1, 2022
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இந்தியா பெருங்கடல், பசிபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடாவில் அதிகளவில் காணப்படும். இது உலகம் முழுவது காணப்படும் அறியவகை ஆமைகளில் ஒன்று. இந்த ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. வடக்கு மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்,,