மேலும் அறிய

Chennai Corporation | கொரோனாவுடன் இணை நோய் உள்ளவர்களுக்கு, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இணை நோயுடன் இருக்கும் வசதி இல்லாதவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த மே மாதம் வரையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மாநகராட்சி செலுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் வசிக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இணைநோய்கள் இருக்கும் வசதி இல்லாத நபர்களின் உடல் நிலையை கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலில் சுவாசக் கோளாறால் ஏராளமானோர் பாதிக்கப்படும் நிலையில் பல்ஸ் ஆக்ஸி மீட்டரை கொண்டு ஆக்சிஜன் அளவு, இதயதுடிப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு நோய் தொற்று பாதித்த நபர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர். இந்த தன்னார்வலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீட்டிற்கு நாள்தோறும் இருமுறை சென்று அவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து அதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட வார்டு அல்லது மண்டல மருத்துவ குழுவினரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Corporation | கொரோனாவுடன் இணை நோய் உள்ளவர்களுக்கு, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

ஒவ்வொரு மண்டலத்திலும் தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பினை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்கும் திட்டத்தினை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்தமாக பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்க வசதி இல்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த நபர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் மூலமாக பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்கப்பட உள்ளது.

இந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை கொண்டு நோயாளிகள் நாள்தோறும் தங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை இரு முறை கண்காணித்து தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும். தொற்று பாதித்த நபர் முழுவதுமாக குணமடைந்த உடன் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்கள் மூலமாக மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு தன்னார்வலர்களிடம் இருந்து இதுவரை 10,400 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. கோவிட் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை 94983 46492 என்ற எண்ணில் தொடர்புகொண்டு நன்கொடையாக வழங்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
Embed widget