Train Cancelled: ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்.. பாதி வழியில் நிறுத்தப்படும் ரயில்கள்?
Chengalpattu Train cancelled: இன்று மற்றும் ஜூன் நான்காம் தேதி 11 மணி முதல் 3 மணி வரை, சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மற்றும் ஜூன் நான்காம் தேதி 11 மணி முதல் 3 மணி வரை, சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள்
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் (Chennai Beach to Chengalpattu Train) சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். அதே போன்று ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
பராமரிப்பு பணிகள்
இன்று மற்றும் ஜூன் நான்காம் தேதி மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். பொதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது முடிந்த அளவிற்கு மின்சார ரயில்கள் பாதிப்படையாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிடும். அப்படி ஒரு சில சமயங்களில் முறையாக, தவிர்க்க முடியாத காரணத்தினால் ரயில்கள் ரத்து செய்யப்படும்
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் ?
இன்று ( 31/05.2024 ) மற்றும் ஜூன் நான்காம் தேதி , 8 மின்சார ரயில் பாதி வழியில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :
1 . வண்டி எண் 40523 - 9:30 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
2 . வண்டி எண் 40527- 10:56 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
3 . வண்டி எண் 40529- 11:40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
4 . வண்டி எண் 40533- 12 : 40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
5. வண்டி எண் 40532- 11:30 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
6. வண்டி எண் 40536- 1 PM மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
7. வண்டி எண் 40538- 1:45 PM மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
8. வண்டி எண் 40542 3 :05 PM மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.