Chennai Air pollution | அதிர்ச்சி.. சென்னையில் காற்று மாசுபாட்டின் நிலை இவ்வளவா? இவர்களுக்கெல்லாம் அபாயம்..
மேலும், சென்னையின் பல்வேறு நகரங்களில் PM 2.5 என்று அழைக்கப்படுகின்ற காற்றில் உள்ள ஆபத்தான நுண் துகள்களின் அளவு, எதிர்பார்த்ததை விட தற்போது அதிகமாக உள்ளது.
மாசு இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களை கேட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும், சென்னை உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் நேற்று காற்று மாசு உச்சத்தை தொட்டது.
PM10, PM2.5 போன்ற (NO2, SO2, CO, O3, NH3, Pb) எட்டு அளவுருக்களில் மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் முன்னதாக காற்று தர குறியீட்டு (AQI) கண்காணிப்பை அறிமுகப்படுத்தியது. இதன் அளவின் மூலம், மாசு குறைபாடு நல்ல, திருப்திகரமான, மிதமான மாசுபாடு, மோசமான, மிகமோசமான, கடுமையான ஆறு பாதிப்புகளாக பிரிக்கப்பட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் மணலி (தொழிற்சாலை), வேளச்சேரி,ஆலந்தூர் பேருந்து நிறுத்தம் (வாகனப் போக்குவரத்து) ஆகிய 3 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணித்துவருகிறது , அதேபோன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மணலி, கொடுங்கையூர், அரும்பாக்கம், பெருங்குடி, ராயபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரத்தை கண்காணித்துவருகிறது.
நேற்றைய திருநாளின் போது , சென்னை வாசிகள் அதிகப்படியான பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக, பெருங்குடி, அரும்பாக்கம் ஆகிய மண்டலங்களில் காற்று மாசு உச்சத்தைத் (மோசம் ) தொட்டது. மேலும், சென்னையின் பல்வேறு நகரங்களில் PM 2.5 என்று அழைக்கப்படுகின்ற காற்றில் உள்ள ஆபத்தான நுண் துகள்களின் அளவு, எதிர்பார்த்ததை விட தற்போது அதிகமாக உள்ளது. காற்று மாசின் அளவு அதிகமாகவுள்ளதால் மக்கள் வெளியே செல்லுமுன்னர் மாசு அளவை தெரிந்துகொண்டு திட்டமிட வேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
ஒரு அமைதியான மாசு இல்லாத விவேகமான நாள் இன்று உங்கள் முன்னால் இருக்க வேண்டும் என்று இயற்கை வேண்டியது செவிடன் காதில்...
— G.M. Kumar (@gmkhighness) November 5, 2021
மாசு குறியீடு மோசமாக இருந்தால், அந்த மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
AQI Category, Pollutants and Health Breakpoints |
||||||||
AQI Category (Range) |
PM10 24-hr |
PM2.5 24-hr |
NO2 24-hr |
O3 8-hr |
CO 8-hr (mg/m3) |
SO2 24-hr |
NH3 24-hr |
Pb 24-hr |
Good (0-50) |
0-50 |
0-30 |
0-40 |
0-50 |
0-1.0 |
0-40 |
0-200 |
0-0.5 |
Satisfactory (51-100) |
51-100 |
31-60 |
41-80 |
51-100 |
1.1-2.0 |
41-80 |
201-400 |
0.5 –1.0 |
Moderately polluted (101-200) |
101-250 |
61-90 |
81-180 |
101-168 |
2.1- 10 |
81-380 |
401-800 |
1.1-2.0 |
Poor (201-300) |
251-350 |
91-120 |
181-280 |
169-208 |
10-17 |
381-800 |
801-1200 |
2.1-3.0 |
Very poor (301-400) |
351-430 |
121-250 |
281-400 |
209-748* |
17-34 |
801-1600 |
1200-1800 |
3.1-3.5 |
Severe (401-500) |
430 + |
250+ |
400+ |
748+* |
34+ |
1600+ |
1800+ |
3.5+ |
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேலும், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசின் இந்த வழிமுறைகளை அநேக மக்கள் நேற்று கடைபிடிக்கவில்லை
பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளை சார்ந்த மக்களால் தீபாவளி கொண்டாடப்படுவதால் இந்த பண்டிகை ஒற்றுமையை வளர்ப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தமிழ்கத்தில் ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.