மேலும் அறிய

Crime: காதில் புளூடூத் ஹெட்போன்.. ராணுவ தேர்வில் நடந்த மோசடி.. 28 பேரை கைது செய்த காவல்துறை..!

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தில் சேர தேர்வு எழுதிய 28 பேர் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி ஏமாற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டனர். 

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தில் சேர தேர்வு எழுதிய 28 பேர் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி ஏமாற்ற முயன்றதாகக் கைது செய்யப்பட்டனர். 

நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் குரூப் சி ராணுவ சிவிலியன் தேர்வில் ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு ஒரு சில தேர்வர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தேர்வு எழுதியதால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் புளூடூத் ஹெட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வில் மோசடி செய்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, மோசடி செய்த 28 பேரையும் பிடித்து, நந்தம்பாக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்து, விசாரணையை துவக்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், 28 பேரும் ராணுவத்தில் எந்த பதவிக்கும் விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா..? இப்படி வேறு யாரேனும் தேர்வு எழுதினார்களா..? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் இதேபோன்று ராஜஸ்தானில் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட நுழைவு தேர்வில் மோசடி நடைபெற்றது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் சுமார் 3993 மையங்களில் ரீட் என்ற Rajasthan Eligibility Exam for Teachers நடந்தது. இரண்டு ஷிஃப்ட்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 16.51 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்தத் தேர்வை ஒட்டி தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பிகானர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்தத் தேர்வில் நூதன மோசடி நடந்துள்ளது. பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 5 பேர் ப்ளூடூத் சாதனம் பொருத்திய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செருப்பை அணிந்து மோசடியில் ஈடுபட முயன்றது அம்பலமானது.

ரூ.6 லட்சம் விலை:

ஒரு செருப்பின் விலை ரூ.6 லட்சம். இதுபோன்று 25 நபர்களுக்கு இந்த ப்ளூடூத் செருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த செருப்பை அணிந்து வந்தவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். கங்காசாஹர் காவல்துறையினருக்கு முன் கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது செருப்பும் மற்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ப்ளூடூத் செருப்பு எப்படி இயங்கும்?

ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருக்கும். அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D  என்றெல்லாம் ப்ராம்ப்ட் பண்ணுவார். அது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் அவர் காதில் கேட்கும். இந்த சாதனத்தை யாரும் பார்க்கமுடியாது. அவ்வளவு சிறிய சாதனம்.  வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் தேர்வு எழுதும் காட்சி நம் கண் முன்னே வந்து செல்கிறது அல்லவா? தொழில்நுட்ப வளர்ச்சிகள் நன்மைக்காகவேத்தானே தவிர, இது போன்ற தவறுகளுக்காக அல்ல.

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget