மேலும் அறிய

Summer Sports Camp : சம்மர் லீவை வேஸ்ட் பண்ணாதீங்க..! விளையாட்டுல இன்ட்ரஸ்ட் இருந்தா, உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..

Chengalpattu News : கோடைகால பயிற்சி முகாம் வருகிற 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறுதல் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள அழைப்பு

தமிழ்நாடு   விளையாட்டு   மேம்பாட்டு  ஆணையம்   செங்கல்பட்டு மாவட்ட    அளவிலான   கோடைகால   பயிற்சி    முகாம்   வருகிற  29.04.2024    முதல் 13.05.2024  வரை    நடைபெறுதல்     விளையாட்டு    வீரர், வீராங்கனைகள்     கலந்து  கொள்ள அழைப்பு                      

கோடைகால விடுமுறை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  பள்ளிகளுக்கு இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்ற பிறகு கோடைகால விடுமுறை விடுவது வழக்கம்.  அந்தவகையில், இந்த ஆண்டு  பள்ளி  மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கோடைகாலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் சிறுமியர்கள்  வெயிலை பொருட்படுத்தாமல்,  வெளியில் சென்று விளையாடி பொழுது போக்குவது  வழக்கமாக இருந்து வந்தது. தொலைக்காட்சி வந்ததிலிருந்து, சிறுவர்கள் வெளியில் செல்வது தடைபட்டது.  

அதன் பிறகு செல்போன் வந்ததிலிருந்து,  சிறுவர்கள் செல்போனில் மூழ்கி இருப்பது  அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக விடுமுறை நாட்களில் கூட மைதானங்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களை விளையாட வைக்க பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தங்கள் வீட்டு குழந்தைகள் ஆரோக்கியமுடன் இருப்பதற்கு இது போன்ற பயிற்சி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுகுறித்து முழு தகவல்களை இந்த  செய்தியில் தெரிவித்துள்ளோம்.

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செங்கல்பட்டு  மாவட்ட விளையாட்டுப்  பிரிவின் சார்பாக   கோடைகால பயிற்சி முகாம் 2024 ஆம் ஆண்டிற்கு   இராஜேஷ்வரி வேதாசலம்  அரசு கலைக் கல்லுரரி மற்றும்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் , 29.04.2024 முதல் 13.05.2024  வரை 15 நாட்கள்   நடைபெற உள்ளது.

இதுகுறித்த செய்தியினை செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ்  தெரிவிக்கையில்   கோடைகால பயிற்சி முகாம்   இராஜேஷ்வரி வேதாசலம்  அரசு கலைக் கல்லுரரியில் 1 . தடகளம், 2 . கால்பந்து 3. கபடி  4, வாலிபால் மற்றும் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடைபந்து , போன்ற  5 விளையாட்டுகள் 29. 4.2024 முதல் 13.04.2024 வரை காலை 6.30 முதல் 8.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 6,30 மணி வரை நடைபெறும் . இப்பயிற்சி முகாமில் பங்கேற்றிட  ரூ.200   பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது   இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்  பங்குபெற்றதற்கான  சான்றிதழ்      வழங்கப்படும்.

யாரை தொடர்புகொள்வது ? 

இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் , 2வது தளம் அறை எண் எப். 203 மாவட்ட ஆட்சியர் வளாகம் செங்கல்பட்டு, அலுவலகத்தில் நேரில் தொடர்வு  கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும்   விவரங்களுக்கு  செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு   மற்றும்   இளைஞர்   நலன்  அலுவலர்   தொலைபேசி  எண். 7401703461 , என்ற எண்ணில் தொடர்பு   கொள்ளலாம். எனவே செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள   விளையாட்டில் ஆர்வமுள்ள  வீரர் / வீராங்கனைகள்  அதிக அளவில்    கலந்து   கொண்டு   பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர்    ச.அருண்ராஜ்  தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Breaking News LIVE: தீண்டாமையை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
Embed widget