மேலும் அறிய
Advertisement
Independence Day 2022: தினமும் தேசியக்கொடி.. தேசிய கீதம் கேட்டால் சல்யூட்... முன் உதாரணமாக திகழும் கிராம மக்கள்...!
நான்கு ஆண்டுகாலமாக தேசியக்கொடியை தினந்தோறும் ஏற்றி சல்யூட் அடித்து செல்லும் கிராம மக்கள். இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முன் உதாரணமாக இருக்கும் சிறுதாமூர் கிராம மக்கள்
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு இடையேயான நாட்களில், ஒவ்வொருவரின் வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப் படுத்துங்கள் என்று மோடி கேட்டு கொண்டுள்ளார். மூவர்ண கொடி இயக்கமானது, தேசிய கொடியுடனான, நாம் கொண்டுள்ள தொடர்பை ஆழப்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் தினமும் தேசியக்கொடி ஏற்றி வரும் கிராமத்தைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் அருகே, செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக சிறுதாமூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை தொழிலான விவசாயத்தை முற்றிலும், நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பூக்கள் காய்கறிகள் என நெற்பயிரின் சார்ந்து கிராம மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியில் இருப்பதால், அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தங்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகாலமாக தினந்தோறும் காலை 8.30. மணிக்கு தவறாமல் தேசியக் கொடியை ஏற்றி கொடிக்கம்பத்திற்கு வீரவணக்கம் செலுத்தி, நாட்டுப்பண் தேசிய கீதம் இசைத்து சல்யூட் அடித்து செல்வது இந்த கிராம மக்களின் வாடிக்கையாக உள்ளது.
தினந்தோறும் கொடிக்கம்பத்திற்கு கோலமிட்டு சுத்தம்செய்து கொடியை கட்டி ஏற்றுவது வழக்கம் இப்பகுதியில் தினந்தோறும் ஒலிக்கப்படும் தேசிய கீதத்தை கேட்ட போது அந்தந்த பகுதிகளில் பணிபுரியும் விவசாயக் கூலிகள், விவசாயிகள், தங்கள் பணிகளை நிறுத்தி மரியாதை செலுத்துவது வழக்கமாக கொண்டு உள்ளதாக கூறுகின்றனர்.
75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில் சிறுதாமூர் கிராமம் இந்தியாவுக்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்கிறது. மேலும் இந்த கிராமங்களில் சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் பனைமரம் வேப்பமரம் உள்ளிட்டவைகளில், தேசியக்கொடி மூவண்ணம் வரைந்து விழிப்புணர்வை எடுத்து ஏற்படுத்தி வருகின்றன. கிராம மக்களின், இத்தகைய வழிமுறை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
India 75: இந்தியா 75 : ஓவிய கலையில் சிறந்து விளங்கிய இந்திய கலைஞர்கள்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion