மேலும் அறிய
தவறவிட்ட பணம்.. மயங்கி விழுந்த மூதாட்டி.. உரியவரிடம் ஒப்படைத்த 108 ஊழியர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த மருத்துவ ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒப்படைத்த மணிகண்டன்
மயங்கி விழுந்த மூதாட்டி
செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி அருகே நேற்று முன்தினம சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த மூதாட்டி, மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் முதலுதவி செய்து மூதாட்டியை பிழைக்க வைக்க முயற்சி செய்துள்ளனர், தொடர்ந்து மூதாட்டி மயங்கி கிடந்துள்ளார்.

பிச்சை எடுத்த பணம்
இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக, உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு அருகிலிருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மூதாட்டிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றினர். மூதாட்டி தற்பொழுது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூதாட்டி உதவிபெற்று சேமித்துசேர்த்து வைத்த பணத்தை, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மூதாட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி மயக்க நிலையில் இருந்தபொழுது அவரை காப்பாற்றிய ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் மணிகண்டன் மூதாட்டியின் பணத்தை பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த பணம் பணம் தான் என்பதை என்பதை உறுதி செய்த உடனே மருத்துவமனையில், மூதாட்டியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார் தொடர்ந்து அப்பணத்தை மூதாட்டியிடம் ஒப்படைத்தார். மேலும் மயங்கி விழுந்தபோது அந்த பணமானது சிதறி சாலையில் விழுந்துள்ளது.

ஒப்படைத்த மணிகண்டன்
108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்த மூதாட்டி காப்பாற்றச் சென்றபொழுது மணிகண்டன் இதை கவனித்து அவற்றை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதனை அடுத்துதான் மூதாட்டி சுயநினைவுக்கு வந்த பிறகு, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் மூதாட்டியை நேரில் சந்தித்து, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த மூதாட்டியின் பணத்தை ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் மணிகண்டனை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion