மேலும் அறிய
Advertisement
பவர் பேங்கில் சார்ஜ்..! செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தாக்கிய மின்சாரம் - என்ன நடந்தது ?
தாம்பரத்தில் உள்ள மகளிர் விடுதியில் செல்போன் சார்ஜ் செய்த படி செல்போனில் பேசி கொண்டிருந்த வடமாநில பெண்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
பவர் பேங்கில் சார்ஜ்
தாம்பரத்தில் உள்ள மகளிர் விடுதியில் செல்போன் சார்ஜ் செய்த படி செல்போனில் பேசி கொண்டிருந்த வடமாநில பெண்கள் மூன்று பேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்கும்குமாரி (19) ,பூனம் (20), ஊர்மிலா குமாரி (24.) இவர்கள் மூவரும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கடப்பேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி சானடோரியம் மெப்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கும்குக்குமாரி மகளிர் விடுதியின் மேல் தளத்தில், பவர் பேங்கில் சார்ச் செய்த படி உயர் மின் அழுத்த கம்பி அருகே நின்று கொண்டு செல்போனில் பேசிகொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் 75 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது.
"108 ஆம்புலன்ஸ் மூலம் "
உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக, அதே போல் அறையில் செல்போனில் சார்ஜ் செய்த படி பேசிகொண்டிருந்த, பூனம் மற்றும் ஊர்மிலா குமாரி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சிறு காயம் அடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற பெண்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயமடைந்த கும்கும்குமாரியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும்,லேசான காயமடைந்த இருவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும் பதற்றம் நிலவியது
இதில் கும்கும்குமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கூடியதால், பெரும் பதற்றம் நிலவியது , தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையை தரப்பில் விசாரித்த பொழுது, பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டே சம்பந்தப்பட்ட பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. உயர் மின்னழுத்த, மின்கம்பம் அருகே சென்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம், இதுகுறித்து தடவியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடவியல் துறையினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலே உண்மையாக எப்படி விபத்து நடைபெற்றது என தெரியவரும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion