மேலும் அறிய
Advertisement

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் இடங்களில் தீவிர பிரச்சாரம் ஓய்வு..
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பிரச்சாரம் ஓய்வு

பிரச்சாரம்
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் வருகிற 6ஆம் தேதி முதல் கட்டமாகவும் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 9 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

வருகிற 6 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் அவ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. பல்வேறு இடங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற ஆறாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புனித தோமையார் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், இலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து திமுக சார்பில் அமைச்சர் அன்பரசன் பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

களியனூர் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார் அப்பகுதி போட்டியிடும் தந்து மனைவி பிரேமா ரஞ்சித்குமார் ஆதரித்து தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று சின்னம் பொருத்திய மாதிரி வாக்கு சீட்டு கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்து தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அனல் பறந்த பிரச்சாரத்திற்கு ஓய்வு கிடைத்துள்ளது.


ஊரக உள்ளாட்சி தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை , சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி /காவலர்களுக்கு பூத் வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நாளை மறுநாள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் பற்றி, நாளை காலை முதல் வாக்குப்பெட்டிகள் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி அதற்கான பணிகளை நடைபெறுகிறது . தேர்தல் நடைபெற உள்ளதால் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion